ஆடுகளம் நரேன் பாவனா, எஸ்தர் அனில் என இருமகள்களுடன் சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் மூத்த மகளான பாவனா தேர்வு எழுதி முடித்து இரவு நேரத்தில் வீட்டுக்கு திரும்பும்போது ரயில்வே பாலத்தின் கீழே ஐந்து மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்படுகிறார்.
ஊரில் உள்ள ஏரியில் குளித்து கொண்டிருக்கும் ஐந்து இளைஞர்களை பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றவர்கள் என வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்து சென்று அந்த இளைஞர்களை போலீசார் என்கவுண்டர் செய்கிறார்கள்.
என்கவுண்டர் செய்யப்பட்ட இளைஞர்களின் உடல்களை அவர்களது பெற்றோர்கள் கேட்க,,,,,,போலீசார் அந்த இளைஞர்களின் உடல்களை தர மறுக்க, போலீசை எதிர்த்து போராட்டத்தில் பெற்றோர்கள் ஈடுபடுகின்றனர் .
போராடும் மக்களை அடி உதையால் போலீசார் அடக்க, மனித உரிமை ஆணைய அதிகாரியான வரலட்சுமி சரத்குமாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்குமளவில் பிரச்சனை பெரிதாகிறது
மனித உரிமை ஆணைய அதிகாரியான வரலட்சுமி சரத்குமார் பாதிக்கப்பட்ட மக்களின் புகாரை ஏற்று பாலியல் சம்பவத்தையும் என்கவுண்டர் செய்த போலீஸ் அதிகாரிகளையும் ,,,, விசாரிக்கும் போது, அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் வரலட்சுமி சரத்குமாரின் விசாரணையில் தெரிய வருகிறது .
அந்த தகவல்களும் சம்பவங்களும் என்ன என்பதை யாருமே எதிர்பார்க்காத முடிவுடன் விறு விறுப்பான கதையோடு சொல்லும் படம்தான் ‘வி 3’.
கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் மனித உரிமை ஆணைய கம்பிரமான அதிகாரியான நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் ,,,, அமைதியாக ,,,,,,கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பில் இயல்பு !
இருமகள்களுக்கு தந்தையாக ஆடுகளம் நரேன் இயல்பான நடிப்பில் குணசித்திர நடிகராக ரசிகர்களை கவர்கிறார் !
எஸ்தர் அனில் , பாவனா கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை தந்துள்ளனர் .
உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பொன்முடி, சந்திரகுமார், ஜெய்குமார், ஷீபா என அனைவரது பங்களிப்பும் நடிப்பில் சிறப்பு !
சிவா பிரபுவின் ஒளிப்பதிவும்,,,, ஆலன் செபஸ்டீன் இசையும் கதைக்களத்திற்கு பக்க பலம் !
நாட்டில் அன்றாடம் எங்கோ ஒரு இடத்தில் அடிக்கடி நடக்கும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் கதையை மையமாக கொண்டு
போலீஸ் துறையின் போலி என்கவுண்டர் சம்பவங்களின் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சி ,போலி என்கவுண்டரில் பலிகடாவாகும் நிரபராதியான அப்பாவிகள்,,,,,இந்த அநீதியையும் அக்கிரமத்தையும் கேட்கும் ஏழை மக்களை சாதிய அடிப்படையில் கல்லால் அடிக்கும் கொடுமை என சமூக பிரச்சனைகள் கொண்ட கதைக்களத்துடன்,,,,, பாலியல் குற்றங்கள் செய்த குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க மக்கள் போராடும்போது ,,,,, இனி வரும் காலங்களில் பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுக்க 'அரசே விபசாரத்தை சட்டப்பூர்வமாக்கு' என பாதிக்கப்பட்ட பொதுமக்களே அரசை வலியுறுத்துவதுபோல தீர்வான முடிவாக சொல்லி தரமான படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அமுதவாணன்.
ரேட்டிங் : 3 / 5
Comments