top of page
mediatalks001

'வைகைப் புயல்’ வடிவேலு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய பாடல்!


மாமன்னன்' படத்திற்காக ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகைப் புயல்’ வடிவேலு பாடிய பாடல்


ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்.'


கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


'மாமன்னன்' படத்திற்காக யுகபாரதி வரிகளில் உருவான ஒரு பாடலை, ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வைகை புயல்’ வடிவேலு பாடியுள்ளார். இப்பாடல் விரைவில் வெளியாகும் என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.


சில தினங்களுக்கு முன் 'மாமன்னன்' படத்தின் First Look போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. தற்போது இப்பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 'மாமன்னன்' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்:


தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவீஸ்

இயக்கம் - மாரி செல்வராஜ்

இணை தயாரிப்பு - M. செண்பகமூர்த்தி, R.அர்ஜுன் துரை

இசை - ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர்

கலை - குமார் கங்கப்பன்

படத்தொகுப்பு - செல்வா Rk

சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன்

பாடல் - யுகபாரதி

நடனம் - சாண்டி

நிர்வாக மேற்பார்வை - E.ஆறுமுகம்

விநியோக நிர்வாகம் - ராஜா.C

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

Comentários


bottom of page