டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு
சுசி கணேசனின் ‘ தில் ஹே கிரே’ தேர்வு .
பிரபலமான டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக சுசி கணேசனின்“ தில் ஹெ கிரே” தேர்வு செய்யப்பட்டிருக்கிறது .
செப்டம்பர் 12 ம் தேதி world Premier ஆக திரைப்பட விழாவில் ரிலீஸ் ஆகிறது .
உத்திரப்பிரதேச காவல்துறையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் வினித்குமார் சிங் , அக்ஷய் ஓபராய் , ஊர்வசி ரவ்ட்டேலா நடிதிருக்கிறார்கள் . எம் . ரமேஷ் ரெட்டி தாயாரித்திருக்கிறார் .
கூரையில்லாத வீடுகளில் வாழ்வதைப்போல வாழும் இன்றைய சோசியல் மீடியா உலகத்தில் , அந்தரங்கம் களவு போனால் நடக்கும் ஆபத்து பற்றி அலசும் இப்படம் தேர்வானது குறித்து சுசி கணேசன் பேசும் போது “ இந்திய அரசின் தேர்வு இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். அதிலும் , முதல் காட்சி , டொராண்டோ திரைப்டவிழாவில் திரையிடப்படுவது , உலக மார்க்கெட்டின் பார்வை இப்படத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது “ என்றார்.
பிரத்யேக காட்சியில் பங்கேற்பதற்காக , சுசி கணேசன் , இணை தயாரிப்பாளர் மஞ்சரி சுசி கணேசன் , நடிகை ஊர்வசி ரவ்ட்டேலா கனடா செல்கிறார்கள். Nfdc - யின் “ இந்தியன் பெவிலியன் “ துவக்க விழாவிலும் கலந்துகொள்கிறார்கள். இந்தாண்டு இறுதியில் வெளியாகும் “ தில் ஹே கிரே” இத்திரைப்படவிழாவில் , வியாபார ரீதியாகவும் , கலை நயம் ரீதியாகவும் அழுத்தமான இடத்தைப் பிடிக்குமென எதிர்பாக்கப்படுகிறது.
Comments