top of page

"வெட்டு" படத்தின் இசை விழா !

mediatalks001





"வெட்டு" படத்தின் இசை விழாவில், இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, கஸ்தூரிராஜா, அம்மா ராஜசேகர், நடிகர்கள் ராகின் ராஜ், சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரவிமரியா, முத்துக்காளை, கிங்காங், விஜய் கணேஷ், கராத்தே ராஜா, காஜா செரிப், நடிகைகள் வனிதா விஜயகுமார், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா மற்றும் திரையுலக பிரமுகர் கலந்து கொண்டனர்!


ஸ்ரீ பூவாயி அம்மன் மூவிஸ் சார்பில், சேலம் வேங்கை அய்யனார் தயாரிப்பிலும், பிரேம்நாத் இணைத் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் "வெட்டு"!


மதுரையை சார்ந்த அம்மா ராஜசேகர், நடன இயக்குனராக தமிழில் பல படங்களுக்கு பணிபுரிந்து, தெலுங்கு திரையுலகில் 300 படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.


கோபி சந்த் நடிப்பில் ரணம் என்ற பெயரில் முதல் படம் தெலுங்கில் இயக்கி, மெகா ஹிட் கொடுத்தவர். தொடர்ந்து தனது இயக்கத்தில் 12வது படமாக தனது 17 வயது மகன் ராகின் ராஜை ஆக்ஷன் ஹீரோவாக்கி, தலா என்ற தெலுங்கு படத்தை சென்ற மாதம் வெளியிட்டார். அந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, 'வெட்டு' என்ற பெயரில் இம்மாதம் 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.


ஒரு 17 வயது பையன் செய்யும் மாபெரும் சம்பவம் தான் இப்படம். அம்மா சென்டிமென்ட், காதல், வீரம், விவேகம் என மண் சார்ந்த உண்மை சம்பவமாக 'வெட்டு' வெளியாகிறது!


ராகின் ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அங்கிதா நடிக்கிறார். இவர்களுடன் சேலம் வேங்கை அய்யனார், பிரேம்நாத், ரோகித் எஸ்தர், அவினாஷ், விஜி சந்திரசேகர், சுந்தரா டிராவல்ஸ் ராதா, இந்திரஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.


கதை, திரைக்கதை, இயக்கம் அம்மா ராஜசேகர்.

இசை எஸ்.எஸ்.தமன், பாடல் டி.ராஜேந்தர், ஒளிப்பதிவு ஷியாம் கே நாயுடு, நடனம் அம்மா ராஜசேகர், ஸ்டண்ட் சில்வா, கெவின், பிஆர்ஓ கோவிந்தராஜ். இணைத் தயாரிப்பு பிரேம்நாத், தயாரிப்பு சேலம் வேங்கை அய்யனார். இம்மாதம் 28ம் தேதி "வெட்டு" வெண் திரையில் வெளிவருகிறது!


@GovindarajPro

Comments


©2020 by MediaTalks. 

bottom of page