
1989 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வருடங்களில் நடைபெறும் கதையாக,,, நாயகன் துல்கர் சல்மான்,,, பக்க வாத நோயால் பாதிக்கப்பட்ட தந்தை , படித்து கொண்டிருக்கும் தம்பி , திருமண வயதில் தங்கை , மனைவி மீனாட்சி செளத்ரி மற்றும் மகனுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார் .
வங்கியில் காசாளராக வேலை செய்தாலும் நடுத்தர குடும்பத்தில் பிறந்ததால் பணம் இல்லாத சிக்கலில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் நிலையில் இருக்கும் துல்கர் சல்மான் பல இடங்களில் அவமானங்களை எதிர் கொள்கிறார்.
இந்நேரத்தில் வங்கியில் தன்னுடன் வேலை செய்யும் ஒருவனால் வங்கி லோனுக்காக அலையும் ராம்கியின் பண பிரச்சனையை தெரிந்து கொள்ளும் துல்கர் சல்மான் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க நேர்மை, உழைப்பு ஆகியவற்றை ஓரங்கட்டிவிட்டு வங்கியில் தன்னுடன் வேலை செய்யும் ஒருவரது துணையுடன் தவறு செய்தாலும் பரவாயில்லை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவுடன் ராம்கியின் பண பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்கிறார் .
இறுதியில் குடும்ப பொருளாதார சிக்கலை சமாளிக்க சாமர்த்தியமாக எடுத்த முடிவில் துல்கர் சல்மான் வெற்றி பெற்றாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘லக்கி பாஸ்கர்’.
பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் நடுத்தர வர்க்க திருமணமான இளைஞராக பண பற்றா குறையால் கஷ்டப்பட்டாலும் அதை வெளிப்படுத்தி கொள்ளாமல் சந்தோஷமாக குடும்பத்துடன் இருப்பது ,,, வசதி வந்த உடன், அதை தன் வாழ்க்கை முறையில் மட்டும் இன்றி உடல் மொழியிலும் இயல்பாக வெளிப்படுத்துவது,,,,,,தனக்கான பதவி உயர்வு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில், வங்கி மேளாளரிடம் கோபப்பட்டு பிறகு அவரிடமே அழுது கெஞ்சும் காட்சிகளிலும் அசத்தலான நடிப்பின் ஆளுமையில் படம் முழுவதும் ஜொலிக்கிறார் .
துல்கர் சல்மானின் மனைவியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராம்கி, சாய்குமார் , டினு ஆனந்த் மற்றும் உடன் நடித்த நடிக - நடிகையர்கள் அனைவருமே திரைக்கதைக்கு பக்க பலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
1990 ஆம் ஆண்டுகளில் நடந்த வங்கி மோசடி மற்றும் பங்குச் சந்தை மோசடி ஆகியவற்றின் பின்னணியை மையமாக கொண்ட கதையுடன்,,,நடுத்தர குடும்பத்தில் பிறந்த நாயகன் பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க வங்கியில் பணத்திற்காக சிறிய மோசடிகளை சாமர்த்தியமாக செய்தாலும்,,,, எந்த பிரச்சனையிலும் சிக்கி கொள்ளாமல் சாதுர்ய புத்தியினால் மிக பெரிய கோடீஸ்வரனாக மாறுவதை சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்புடன் அனைவரும் ரசிக்கும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
ரேட்டிங் - 3 . 5 / 5
Kommentare