top of page
mediatalks001

“மாமன்” -நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் புதிய படம்


நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும், புதிய படத்திற்கு “மாமன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது !!


Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.


இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று , படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது.


கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.


விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.


தொழில் நுட்ப குழு விபரம்


எழுத்து, இயக்கம் - பிரசாந்த் பாண்டியராஜ்

தயாரிப்பு - K. குமார்

தயாரிப்பு நிறுவனம் - Lark Studios

இசை - ஹேசம் அப்துல் வஹாப்

ஒளிப்பதிவு - தினேஷ் புருஷோத்தமன்

கலை இயக்கம் - G துரை ராஜ்

படத்தொகுப்பு - கணேஷ் சிவா

சண்டைப்பயிற்சி - மகேஷ் மேத்யூ

மக்கள் தொடர்பு - யுவராஜ்.

Comments


bottom of page