MediaTalks Logo
Header Advertisement
cinema news
11 February 2025 at 21:14•1 Views

பூஜையுடன் தொடங்கிய 'டெலிவரி பாய்' திரைப்படத்தின் படப்பிடிப்பு !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
பூஜையுடன் தொடங்கிய 'டெலிவரி பாய்' திரைப்படத்தின் படப்பிடிப்பு !

லியோ சிவக்குமார், பிரிகடா நடிப்பில் நானி இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் “டெலிவரி பாய்” (Delivery Boy)

அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இத்திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் ,துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் பூஜை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களின் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: