நாயகன் விஜய் சத்யா நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் .மனைவி ஷெரின் மற்றும் தனது மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திரும்பும் போது அமைச்சர் வெங்கடேஷின் மகனால் எதிர்பாராத மிக பெரிய பிரச்சனை எற்பட,, அதில் இருந்து தப்பிப்பதற்காக விஜய் சத்யா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கையால், அவர் மட்டும் இன்றி அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் அமைச்சர் வெங்கடேஷ் கொலை தாக்குதல் ஒரு பக்கம் ,
மற்றொரு பக்கம் காவல்துறையின் துரத்தல் என குடும்பத்துடன் வாழ்வா...சாவா...!, என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சத்யா முடிவில் அனைவரின் பிடியில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை சொல்லும் படம்தான் ‘தில் ராஜா’.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யா கம்பிரமான ஆறடி உயர உடற் கட்டுடன் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக சிறப்பான நடிப்பில் அசத்துகிறார் .
விஜய் சத்யாவின் மனைவியாக நாயகியாக நடித்திருக்கும் ஷெரின்,
அமைச்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஏ.வெங்கடேஷ், அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் ,
போலீஸ் அதிகாரியாக கவர்ச்சியான சம்யுக்தா,நாயகனின் நண்பராக நடித்திருக்கும் விஜய் டிவி பாலா,இமான் அண்ணாச்சி,கு.ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் ..
ஒளிப்பதிவாளர் மனோ வி.நாராயணாவின் ஒளிப்பதிவும் , அம்ரீஷ் இசையும் கதைக்கேற்றபடி உள்ளது .
வழக்கமான விறு விறு வேகமெடுக்கும் ஆக்ஷன் கதையுடன் அழுத்தமில்லாத திரைக்கதையினால் சில காட்சிகளின் தொய்வு இருந்தாலும் வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் ஃபார்மூலாவுடன் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.
ரேட்டிங் - 2.5 / 5
コメント