top of page

‘மாயன்’ - விமர்சனம் !

mediatalks001

சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் ஆடுகளம் நரேன் தலைமையில் வேலை செய்கிறார் நாயகன் வினோத் மோகன்.

கண் எதிரே என்ன பிரச்சனை நடந்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதோடு, எத்தகைய அவமானம் ஏற்பட்டாலும் அதை சகித்துக் கொண்டு வாழ்வதோடு, தனது அம்மா ஸ்ரீ ரஞ்சனியின் ஆசைப்படி ஒரு சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சியுடன் வாழ்கிறார் .

இந்நேரத்தில் வினோத் மோகனுக்கு வாட்ஸ் அப்பிலும் , மின்னஞ்சல் மூலமாகவும் வரும் 13 நாட்களுக்குள் உலகம் அழியப்போகிறது நீ ஒரு மாயனின் பிள்ளை என்பதால் உனக்கு இதை தெரியப்படுத்துகிறோம். இது ரகசியம், யாரிடமும் சொல்லக் கூடாது” என்று செய்தி வருகிறது .

இதை நம்பாத வினோத் மோகனை சுற்றி சில மர்மமான சம்பவங்கள் நடக்கிறது.

இன்னும் 13 நாட்களில் உலகம் அழியத்தானே போகிறது என்பதால் அமைதியான நாயகனாக இருந்தவர் அதிரடி ஆக்ஷன் நாயகனாக கண் எதிரே என்ன அட்டூழியங்கள் நடந்தாலும் எதற்கும் பயப்படாமல் எதிரிகளை அடித்து பந்தாடுகிறார் .

முடிவில் வாட்ஸ் அப்பிலும் , மின்னஞ்சல் மூலமாகவும் வந்த செய்தி போல 13 நாட்களில் உலகம் அழிந்ததா?

நாயகன் வினோத் மோகனுக்கு தகவல் அனுப்பிய மர்மமான மாயன்கள் யார்? என்பதை சொல்லும் படம்தான் ‘மாயன்’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் வினோத் மோகன் தொடக்கத்தில் அமைதியான சுபாவம் கொண்டவராக நடிக்கும்போதும் அதன் பின் கம்பிரமான உடற்கட்டில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும்போதும் இயல்பான நடிப்பில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .


நாயகியாக நடித்திருக்கும் பிந்து மாதவி, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வில்லன்களாக நடித்திருக்கும் சாய் தீனா, ராஜ சிம்மன் ,வில்லனின் தங்கையாக வரும் ரஞ்சனா நாச்சியார் ,ஸ்ரீ ரஞ்சனி ,ஆடு களம் நரேன் . கஞ்சா கருப்பு, மரியா, பியா பாஜ்பாயி என நடித்தவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .


இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசை பாடல்கள் ஓகே பின்னணி இசையில் இரைச்சலை குறைத்திருக்கலாம் .


ஒளிப்பதிவாளர் கே.அருண் பிரசாத் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !


தொடக்கத்தில் கிராபிக்ஸ்ல் முன்று ஜென்மங்களாக நாயகனுக்கும் ,வில்லனுக்கும் பகையான கதை என ஆரம்பித்து இன்றைய காலக்கட்டத்தில் வழக்கமான வில்லன் - ஹீரோ கதையாக இடையிடையே மாயவர்கள், ஆதிசிவன், நாயகனை துரத்தும் பாம்பு என கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இருந்தாலும் அழுத்தமில்லாத திரைக்கதையில் சில காட்சிகளில் தொய்வு ஏற்பட்டாலும்,,,புதிய முயற்சியாக கமர்ஷியல் ஃபேண்டஸி படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜெ.ராஜேஷ் கண்ணாவை பாராட்டலாம் .


ரேட்டிங் - 3 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page