சென்னை காசிமேடு பகுதியில் சாலையோரத்தில் தள்ளுவண்டி உணவகம் ஒன்றை தன் அம்மாவின் துணையுடன் நடத்தி வருகிறார் ஆர் ஜே பாலாஜி.
வீட்டில் செய்வது போல ருசியுடன் உணவகம் நடத்தி வரும் ஆர் ஜே பாலாஜியின் உணவின் சுவைக்காக சாப்பிடும் வாடிக்கையாளர்களில் ஐ ஏ எஸ் அதிகாரியும் ஒருவர் .
ஆர் ஜே பாலாஜிக்கு அரசு மூலம் கடன் தொகை பெறுவதற்கான உதவியை அந்த அரசு அதிகாரி செய்கிறார்.
திடீரென ஒரு நாள் மர்ம நபர்களால் ஆர் ஜே பாலாஜிக்கு உதவி செய்த ஐ ஏ எஸ் அதிகாரிஅவரது வீட்டில் கொல்லப்படுகிறார் .
இந்நேரத்தில் அந்த அரசு உயர் அதிகாரியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு செய்யாத கொலைக்கு குற்றவாளியாக்கப்படும் ஆர்ஜே பாலாஜி, சென்னை மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்படுகிறார்.
சிறைச்சாலையில் அரசியல் செல்வாக்குள்ள தாதா செல்வராகவன் தன் ராஜ்ஜியத்தில் சிறைச்சாலையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்.
அவருக்கும் புதிதாக வரும் சிறை அதிகாரி ஷரப் யுதீனுக்கும் மோதல் ஏற்படுகிறது.
செல்வராகவனுக்கு ஹக்கிம்ஷா ,அந்தோணிதாசன் ஜேசுதாஸ் ,சாமுவேல் ராபின்சன் என மூன்று கைதிகளும் விசுவாசமாக இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், சாமுவேல் ராபின்சன் இயேசுவை முன்னிலைப்படுத்தி செல்வராகவன் இனி எந்த குற்றச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்றெண்ணி மனம் திருந்த வைக்கிறார் .
மற்றொரு பக்கம் சிறை அதிகாரியான ஷரப் யுதீன் ஆர் ஜே பாலாஜி வைத்து செல்வராகவனை கொலை செய்ய நினைக்கிறார் .
ஒரு கட்டத்தில் சிறையில் மர்மமான முறையில் செல்வராகவன் கொலை செய்யப்படுகிறார்.
இதனையடுத்து சிறையில் செல்வராகவனின் விசுவாசிகளால் மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது.
கலவரத்துக்கு பின் கைதியான அந்தோணிதாசன் ஜேசுதாஸ் ஏற்கனவே கைதாகி சொகுசாக இருக்கும் மூன்று அரசு எம் எல் ஏக்களை பணய கைதிகளாக வைத்து அனைத்து கைதிகளின் சார்பில் மேலிடத்துக்கு சில கோரிக்கைளை வைக்கிறார் .
முடிவில் செல்வராகவனை கொலை செய்த மர்ம நபர் யார் ?
அந்தோணிதாசன் ஜேசுதாஸ் அனைத்து கைதிகளின் சார்பில் மேலிடத்துக்கு வைத்த கோரிக்கைளை போலீசார் நிறைவேற்றினார்களா ?
செய்யாத கொலைக்கு குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஆர் ஜே பாலாஜி விடுதலை ஆனாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘சொர்க்கவாசல்’ .
பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும்
ஆர் ஜே பாலாஜி செய்யாத குற்றத்திற்கு சிறைக்கு செல்லும் அப்பாவி இளைஞராக இயல்பான நடிப்பில் அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பில் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன்
சிகாமணி என்ற ரவுடி கதாபாத்திரத்தில் வரும் செல்வராகவன், சிறை அதிகாரியாக நடித்திருக்கும் ஷரப் யுதீன், துணை அதிகாரியாக நடித்திருக்கும் கருணாஸ், விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ்,
ரவி ராகவேந்திரா, பாலாஜி சக்திவேல் டைகர் மணியாக நடித்திருக்கும் ஹக்கிம்ஷா, சீலன் வேடத்தில் நடித்திருக்கும் அந்தோணிதாசன் ஜேசுதாஸ், கெண்ட்ரிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாமுவேல் ராபின்சன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர் .
இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியரின் பின்னணி இசையும் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
1999 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் மத்திய சிறைச்சாலையில் சென்னையை கலக்கிய மிக பெரிய தாதா சிறையில் இறந்த பிரச்சனையில் அப்போதைய கைதிகள் நடத்திய கலவரத்தில் துணை ஜெயிலர் எரித்துக் கொல்லப்பட்டார், கலவரத்தை அடக்க வந்த காவல்துறையினர் சுட்டதில் 9 கைதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையுடன் சில காட்சிகள் தவிர படம் முழுக்க சிறைச்சாலையை மையப்படுத்திய அழுத்தமான திரைக்கதை அமைப்பில் சினிமாத்தனம் இல்லாத இயல்பான கலவர காட்சிகளுடன் அனைவரும் ரசிக்கும் விதமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சித்தார்த் விஷ்வநாத்.
ரேட்டிங் : 3 .5 / 5
Σχόλια