தைரியமான கூலித்தொழிலாளியான செம்மரம் வெட்டும் புஷ்பா காவல் துறைக்கு எதிராக துணிச்சலான முடிவு எடுப்பதில் மூலம் செம்மரக் கடத்தல்காரர்கள் சிண்டிகேட்டின் தலைவராக முன்னேற்றுகிறார்.
ஜப்பான் துறைமுகத்தில் புஷ்பாவின் செம்மரக்கட்டைகள் மாட்டிக்கொள்கிறது. அதனை மீட்க அங்கு செல்லும் புஷ்பா எதிரிகளால் சுடப்பட்டு கடலில் விழுந்து விடும்போது படம் தொடங்குகிறது.
செம்மரக் கடத்தல் சிண்டிகேட்டின் தலைவனான புஷ்பா தனக்கான ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி சித்தூர் சேஷாசலம் காடுகளில் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதால் மிக பெரிய வளர்ச்சி அடைகிறார்.
முழு கூட்டமும் புஷ்பாவின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
மற்றொரு பக்கம் புஷ்பாவைத் தடுக்க போலீஸ் எஸ்.பி. பகத் பாசில் திட்டமிடுகிறார்.
காவல்துறை மட்டும் இன்றி அரசியல் துறையையும் தனது பண பலத்தால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புஷ்பாவுக்கு எம்.பியாக இருக்கும் ராவ் ரமேஷ் மூலம் ஆந்திர மாநில முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அப்போது அவரது மனைவி ராஷ்மிகா முதல்வருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும், அதை வீட்டில் மாட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
மனைவியின் ஆசைப்படி முதல்வருடன் புஷ்பா புகைப்படம் எடுக்க நினைக்கும் போது , முதலமைச்சர் புஷ்பாவை அவமானப்படுத்தி விடுகிறார்.
தன்னிடம் இதுவரை எதையும் கேட்காத தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் புஷ்பா, தான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தயாராக இருப்பவரை ஆந்திர மாநில முதல்வர் இருக்கையில் உட்கார வைக்க முடிவு செய்கிறார்.
இதனையடுத்து எம்.பியாக இருக்கும் ராவ் ரமேஷை ஆந்திர மாநிலத்திற்கு முதலமைச்சராக்க திட்டமிடுகிறார் புஷ்பா .
மறுபக்கம் ஆதாரத்துடன் புஷ்பாவை கைது செய்ய நினைக்கிறார் போலீஸ் எஸ் பி. பகத் பாசில்
முடிவில் புஷ்பா ராவ் ரமேஷை தான் நினைத்தபடி முதலமைச்சராக்க ஈடுபடும் முயற்சியில் வெற்றி பெற்றாரா ? இல்லையா? ,
ஆதாரத்துடன் எஸ் பி. பகத் பாசில் புஷ்பாவை கைது செய்தாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’புஷ்பா 2 : தி ரூல்’
கதையின் நாயகனாக புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன் உடல் மொழியில் இயல்பான நடிப்பில் காதல்,ஆக்க்ஷன், ,நடனம், செண்டிமெண்ட் குறிப்பாக அதிரடி நாயகனாக சண்டைக்காட்சிகளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் .
கதைகேற்றபடி சிறப்பான நடிப்பில் அல்லு அர்ஜுன் மனைவியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா.
எஸ் பி. கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பகத் பாசில் அரசியல்வாதியாக நடித்திருக்கும் ராவ் ரமேஷ், முதல் பாகத்தின் வில்லன் சுனில், அவரது மனைவியாக நடித்த அனுஷ்யா பரத்வாஜ் ஆகியோர் கதைக்கு ஏற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் .
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஒளிப்பதிவாளர் மிரோஷ்லவ் புரோன்ஷெக்கின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகவும் பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறார்.
செம்மர கடத்தல் பின்னணி கொண்ட கதையில் போலீஸ், அரசியல், மனைவி மற்றும் மகள் செண்டிமெண்ட் ஆகியவற்றை மையமாக வைத்து அழுத்தமான திரைக்கதை அமைப்பில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு முழு நீள அதிரடி திரைப்படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுகுமார் .
ரேட்டிங் - 3 . 5 / 5
Comments