தமிழ் திரைப்பட இயக்குனராக பட வாய்ப்புக்காக தினசரி வெவ்வேறு தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லி வாய்ப்பு தேடும் நாயகன் உதய் கார்த்திக் சென்னையில் தாத்தா, அம்மா – அப்பா மற்றும் இரண்டு அண்ணன்கள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
இதில் மூத்த அண்ணன் திருமணமான விவேக் பிரசன்னா வக்கீலாக இருக்கிறார். இரண்டாவது அண்ணன் பார்த்திபன் குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நாயகன் உதய் கார்த்திக் திரைப்பட இயக்குனராக முயற்சி செய்யும் நேரத்தில் .தயாரிப்பாளர் அரவிந்த் ஜானகிராமனிடம் கதை கூற அந்த கதை அவருக்கு பிடித்தும் போக உடனடியாக இயக்குனராக ஒப்பந்த பதிவு செய்து அட்வான்ஸ் பெற்றுக்கொள்கிறார் நாயகன் உதய் கார்த்திக்.
இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது இந்நிலையில் சில பிரச்சனைகள் வருவதோடு, சில சூழ்ச்சிகளால் அவரது வாய்ப்பு நிராகரிக்கப்படுவதோடு, அவரது கதையும் சட்ட ரீதியாக திருடப்படுகிறது.
இதன் பின் நாயகன் உதய் கார்த்திக் திரைப்பட இயக்குனராக வெற்றி பெற குடும்ப உறுப்பினர்களே சொந்தமாக புதிய படம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர் .
இறுதியில் தன் குடும்பத்தினர் தயாரிப்பில் நாயகன் உதய் கார்த்திக் திரைப்படத்தை இயக்கினாரா? அவர் இயக்கிய படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியதா ? என்பதை சொல்லும் படம்தான் ’ஃபேமிலி படம்’
கதையின் நாயகனாக நடிக்கும் உதய் கார்த்திக் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் லட்சிய மிக்க இளைஞ்ராக வாழ்க்கையில் வெற்றி பெற துடிக்கும் இளைஞ்ராக இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
கதைகேற்றபடி சிறப்பான நடிப்பில் காதலியாக நடித்திருக்கும் நாயகி சுபிக்ஷா கயரோஹனம்
அண்ணன்களாக நடித்த விவேக் பிரசன்னா மற்றும் பார்த்திபன் குமார் இருவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் காயத்ரி, நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் என அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
அனீவி இசையில் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை படத்திற்கு பக்க பலம்.
மெயேந்திரனின் ஒளிப்பதிவு காட்சிகளில் தரம் .
திரைப்பட இயக்குனராக தன் மகன் வெற்றி பெற பெற்றவர்களே புதிய படம் தயாரிக்கும் கதையை மையமாக வைத்து குடும்ப செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும்விதமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் செல்வ குமார் திருமாறன் .
ரேட்டிங் : 3 / 5
コメント