top of page
mediatalks001

’ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ - விமர்சனம்


சென்னையில் துப்புரவு தொழில் செய்யும் கணவன் இல்லாத பெண்ணான அபிராமியின் மகன் கார்த்தி திருநங்கையாக மாறிவிடுகிறான்.


திருநங்கையாக மாறினாலும் ஏற்றுக்கொண்டு தன் மகன் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசையில் பி ஜி எஸ்டம் வட்டிக்கு கடன் வாங்கி மகனை படிக்க வைக்கிறார்.


இந்நிலையில் கடன் கொடுத்த பி ஜி எஸ்ஸால் அபிராமி மகனுக்கு பாலியல் பிரச்சனை ஏற்படுகிறது . ஒரு கட்டத்தில் வேலை செய்யும் நேரத்தில் அபிராமியிடம் துப்பாக்கி ஒன்று கிடைக்க அபிராமி எடுத்த முடிவு என்ன ? என்பது முதல் கதை.


பணக்கார பெண்ணை காதலித்து அவரது பெற்றோரின் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொள்ளும் ஆட்டோ டிரைவரான பரத், சிறு நீரக பாதிப்பினால் காதல் மனைவி உயிருக்கு போராடும் நேரத்தில் அவரை காப்பாற்ற பரத்துக்கு 15 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் அவரிடம் துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது.. முடிவில் பரத் எதிர்பார்க்கும் பணம் அவருக்கு கிடைத்ததா ? இறுதியில் பரத் தன் மனைவியை காப்பாற்றினாரா? பரத்துக்கு கிடைத்த துப்பாக்கியால் அவர் எடுத்த முடிவு என்ன ?என்பது இரண்டாவது கதை.


அஞ்சலி நாயர் அப்பாவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். அங்கு அவரை மாமியார் -மாமனார் பாசமாக கவனித்துக் கொள்கின்றனர்.

திருமணத்துக்கு பின் முதலிரவு முடிந்த பிறகு, அதற்கு அடுத்தநாள் முதல் அஞ்சலியோடு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட மறுக்கிறார் அவரது கணவன் .


இந்நிலையில் அஞ்சலி நாயர் திடீர் என கர்ப்பமடைந்து விடுகிறார். ஆனால், அந்த கர்ப்பத்திற்கு தன் கணவன் காரணம் அல்ல, என்ற உண்மை தெரிய வருகிறது. . ஏற்கனவே அவர் வெளியில் இருக்கும்போது அவரது கை பையில் துப்பாக்கி இருக்கிறது . அந்த துப்பாக்கியால் அஞ்சலி நாயர் எடுத்த அதிரடி முடிவு என்ன ? என்பதே மூன்றாவது கதை.


தன் ஜாதி மீது பாசம் கொண்ட தலைவாசல் விஜய்யின் மகள் பவித்ரா லட்சுமி, வேறு ஜாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறார்.


பவித்ரா லட்சுமியின் காதல் விவகாரம் தலைவாசல் விஜய்க்கு தெரியவர, பவித்ராலட்சுமியை கண்டிக்கிறார். ஒரு கட்டத்தில் பவித்ரா லட்சுமி பெற்றோருக்கு தெரியாமல் காதலித்தவரை பதிவு திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறார் இந்த விஷயம் அறிந்த தலைவாசல் விஜய், திருமணத்தை நிறுத்த அவரது காரில் புறப்படும்போது துப்பாக்கி ஒன்று காரில் இருக்கிறது. காரில் கிடைத்த துப்பாக்கியால் தலைவாசல் விஜய் எடுத்த முடிவு என்ன ? என்பதே நான்காவது கதை.


அனைத்து கதைகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கும் துப்பாக்கி,,, நான்கு கதைகளுக்குள் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? என்பதை சொல்லும் படம்தான் ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’


தலை வாசல் விஜய் ,பரத், அபிராமி, பவித்ரா லட்சுமி, அஞ்சலி நாயர்,ஷான், கல்கி, ராஜாஜி, கனிகா, எம்.ஜெகன் கவிராஜ், அரோல் டி.சங்கர், ஷான், பி.ஜி.எஸ் என நடித்த நடிகர்கள் அனைவரும் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர்


ஒளிப்பதிவாளர் - K.S. காளிதாஸ் & கண்ணா.R ஒளிபப்பதிவும், ஜோஸ் பிராங்க்ளின் இசையும் ,ஷான் லோகேஷ் படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலம் .


நான்கு கதைகளுக்குள் துப்பாக்கியை மையப்படுத்தி ஆரம்பத்தில் ஏற்படும் குழப்பங்களை திரைக்கதையில் சாமர்த்தியமாக கையாண்டு அனைவரும் ரசிக்கும்படி க்ரைம் திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாத் முருகன்



ரேட்டிங் : 3.5 / 5

Commenti


bottom of page