தமிழ் திரைப்பட இயக்குனராக உள்ள நாயகன் ஆர்யன் ஷ்யாம் நரபலி அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட ஒரு ஹாரர் திரைப்படம் எடுக்க நினைக்கிறார். படத்தின் அலுவலகத்திற்காக அவரது தயாரிப்பாளரை தொடர்பு கொள்ளும்போது கடற்கரை அருகிலுள்ள ஈ சி ஆரில் பஞ்சமி பங்களாவை சொல்கிறார் .
தயாரிப்பாளர் சொன்னபடி கதை விவாதம் செய்ய உதவி இயக்குனர்களாக இருக்கும் பெண்களான ஆத்யா பிரசாத், லிமா பாபு மற்றும் கிஷோர் , ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் உடன்பஞ்சமி பங்களாவிற்கு செல்கிறார் நாயகன் ஆர்யன் ஷ்யாம்.
இரவு நேரத்தில் நாயகன் ஆர்யன் ஷ்யாம் அங்கிருக்கும் ஓஜோ போர்ட் ஒன்றை எடுத்து விளையாடுகிறார் .
அவரது விளையாட்டில் கிஷோர் , ராஜ்குமார் , ஆத்யா பிரசாத் மற்றும் லிமா பாபு கலந்து கொள்ள அப்போது அங்கு ஒரு அமானுஷ்ய குரல் கேட்கிறது. இதனையடுத்து அந்த விளையாட்டை பாதியில் விட்டுவிட்டு அனைவரும் தூங்க சென்று விடுகின்றனர்.
ஒரு கட்டத்தில் நாயகன் ஆர்யன் ஷ்யாம் உடன் இருக்கும் அனைவரிடத்திலும் நடு இரவில் மீண்டும் அந்த அமானுஷ்ய குரல் அங்கிருக்கும் கேமராவில் உள்ள வீடியோவை பார்க்குமாறு கூறுகிறது.
அந்த வீடியோவில் அம்மா கிரியேசன்ஸ் சிவாவின் குடும்பம் இதே பஞ்சமி பங்களாவில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் சந்தோசமாக இருக்கும்போது முகமூடி அணிந்த மர்ம மனிதன் விட்டுக்குள் நுழைந்து குடும்பத்தில் இருப்பவர்களை கொடூரமாக தாக்குகிறான்.
இந்த வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போது அதே முகமூடி அணிந்த மர்ம மனிதன் , நாயகன் ஆர்யன் ஷ்யாம் மற்றும் அவரது உடன் இருப்பவர்களை அதே போல கொடுரமாக தாக்குகிறான்.
அனைவரும் முகமூடி அணிந்த மர்ம மனிதனுக்கு பயந்து அந்த பங்களாவில் இருந்து தப்ப முயற்சி செய்கின்றனர் .
முடிவில் முகமூடி அணிந்த அந்த மர்ம மனிதன் யார்? என்ன காரணத்திற்காக அனைவரையும் அவன் கொலை செய்கிறான் ?
மர்மமான பஞ்சமி பங்களாவில் மாட்டி கொண்ட அனைவரும் அங்கிருந்து தப்பித்தார்களா? இல்லையா?என்பதை சொல்லும் படம்தான் ’அந்த நாள்’
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யன் ஷ்யாம் அறிமுக நடிகர் போல இல்லாமல் அனுபவ நடிகராக இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார் .. திறமையான நடிகரான இவருக்கு தமிழ் திரையுலகில் கவனம் பெறும் நாயகனாக நிச்சயம் இடம் பெறுவார் .
நாயகிகளாக நடித்திருக்கும் ஆத்யா பிரசாத், லிமா பாபு இருவரும் கதைகேற்றபடி நடித்துள்ளனர் .
கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி என் படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணம் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளை பயமுறுத்தும்படி மிரட்டலாக படமாக்கியிருக்கிறார்.
நரபலியை மையமாக கொண்ட கதையுடன் இறுதியில் யாரும் யூகிக்க முடியாத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் கலந்த க்ரைம் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விவி கதிரேசன்
ரேட்டிங் : 3. 5 / 5
Comments