top of page
mediatalks001

’சூது கவ்வும் 2’ - விமர்சனம் !

1987 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக அரசியல்வாதி எம் எஸ் பாஸ்கருக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் நேர்மையான அரசியல்வாதியான வாகை சந்திரசேகர் அருமை பிரகாசம் என பெயர் வைக்கிறார் .


அந்த நேரத்தில் குழந்தை ஏற்படுத்தும் இயற்கை உந்துதலில் ஏற்படும் விபத்தால் கோமா நிலைக்கு செல்கிறார் வாகை சந்திரசேகர்.


இதனையடுத்து அரசியல் சூழ்ச்சியினால் ராதாரவி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்கிறார்.


2008 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா வங்கி பணத்தை கொள்ளையடித்த வழக்கில் போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார்.


சில நாட்களுக்கு பிறகு நன்னடத்தையால் சிறையில் இருந்து வெளியே வரும் மிர்ச்சி சிவா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆள் கடத்தல் வேலையை மீண்டும் செய்ய ஆரம்பிக்கிறார்.


இந்நிலையில் பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் வாகை சந்திர சேகருக்கு நினைவு வருகிறது. அவரது உதவியாளராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மூலம் ராதாரவி மற்றும் அவரது அமைச்சர்கள் செய்யும் ஊழல் பற்றி தெரிந்து கொள்கிறார்.


அதிர்ச்சியடையும் வாகை சந்திரசேகர் தன் செல்வாக்கு இன்னும் இருக்கிறது என நினைத்து ராதாரவியிடம் கண்டிப்பாக நடக்க ,,,,, ராதாரவி செய்யும் அராஜகத்தால் கட்சியை விட்டே வெளியேறுகிறார் .


இதனையடுத்து வாகை சந்திரசேகர் புதிய கட்சியை தொடங்கி மக்கள் செல்வாக்கை பெறுகிறார்.


இந்நிலையில் தேர்தல் வர இருக்கும் நேரத்தில் முதலமைச்சர் ராதாரவி மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை அமைச்சர் கருணாகரனிடம் ஒப்படைக்கிறார்.


தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்ய முதலமைச்சர் ராதாரவி கருணாகரனுக்கு ஆணையிடுகிறார் .


மற்றொரு பக்கம் பறி போன போலீஸ் அதிகாரி வேலை மீண்டும் வேண்டுமானால் அமைச்சர் கருணாகரனை கடத்திகொல்ல எம் எஸ் பாஸ்கர் யோக் ஜேபியை துண்டி விட ,, முதலில் கருணாகரன் உடன் இருக்கும் முக்கிய நபர்களை யோக் ஜேபி கடத்தி வெள்ளையான இடத்தில் அடைத்து வைக்கிறார்


இதே நேரத்தில் சிவா மற்றும் அவரது கூட்டாளிகளால் அமைச்சர் கருணாகரன் கடத்தப்படுகிறார்.


முடிவில் யோக் ஜேபியிடம் அமைச்சர் கருணாகரன் சிக்கினாரா ?கருணாகரனால் முதலமைச்சர் ராதாரவி சொன்னபடி மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?

நடக்க இருக்கும் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய முதலமைச்சர் வேட்பாளர் யார் ?என்பதை சொல்லும் படம்தான் ’சூது கவ்வும் 2’


கதையின் நாயகனாக நடிக்கும் மிர்ச்சி சிவா வழக்கமான காமெடித்தனத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் கதாபாத்திரத்தை தக்க வைக்கிறார் .

சிவாவின் கனவு கன்னியாக வரும் நாயகி ஹரிஷா ஜஸ்டின் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.


அமைச்சராக நடித்து இருக்கும் கருணாகரன்,வாகை சந்திரசேகர், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர்,யோக் ஜேபி, அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி ஆகியோர் நடிப்பு கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளது.


இசையமைப்பாளர் எட்வின் இசையில் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் ,ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.


ஆரம்பத்தில் அரசியல் கதையாக தொடங்கி முதல் பாகம் கலந்த திரைக்கதையில் அரசியல்,ஊழல், ஆள் கடத்தல் மற்றும் பணம் ஆகியவற்றை மையமாக கொண்டு விறு விறுப்புடன் காமெடி கலந்த படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன்


ரேட்டிங் : 3 / 5

Comentarios


bottom of page