top of page

’விடுதலை - பாகம் 2’ - விமர்சனம்

mediatalks001

தேடப்படும் குற்றவாளி பெருமாள் வாத்தியாரான விஜய் சேதுபதியை போலிசாக நடிக்கும் சூரியால் தனி படைபோலிசாரால் கைதாவது போல விடுதலை படத்தின் முதல் பாகம் முடிகிறது .


அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் வாத்தியார் விஜய் சேதுபதிக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என கூறி மேலதிகாரி சேத்தன் தலைமையிலான தனி படை காட்டு பாதை வழியாக வேறு இடத்துக்கு விஜய் சேதுபதியை அழைத்து செல்கிறார்கள்.


இவர்களுக்கு ஜீப் ஓட்டுபவராக சூரியும் உடன் செல்கிறார்.


இந்நிலையில் பள்ளி வாத்தியாரான விஜய் சேதுபதி தமிழர் மக்கள் படையின் தலைவரானது என்ன காரணத்திற்காக , அவரது இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடுவது ஏன் என்கிற விளக்கத்தை தன்னுடன் வரும் போலிசாருடன் தன் கதையை சொல்லிக் கொண்டே வர,,,, ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியின்தமிழர் மக்கள் படையின் ஆட்கள் அவரை விடுவிக்க திட்டம் போடுகிறார்கள்.


முடிவில் விஜய் சேதுபதியின் தமிழர் மக்கள் படையின் ஆட்கள் விஜய் சேதுபதியை தனி படை போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்றினார்களா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’விடுதலை – பாகம் 2’


பெருமாள் வாத்தியாராக நடிக்கும் விஜய் சேதுபதி இயல்பான நடிப்பில் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அப்பாவி பள்ளி வாத்தியார் ,, கம்யூனிச இயக்கவாதி, தொழிற்சங்கவாதி, ஆயுதம் ஏந்தி போராடும் போராளி, தமிழர் மக்கள் படை தலைவர் என பல பரிணாமங்களில் பயணித்து அன்பு, காதல், பாசம், வீரம் என அனைத்திலும் உணர்வுப்பூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .


முதல் பாகத்தின் நாயகன் சூரிக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் படத்தின் இறுதி காட்சிகளில் கவனிக்க வைக்கிறார் .


நாயகியாக நடிக்கும் மஞ்சு வாரியர் கம்யூனிசத்தை விரும்பும் பெண்ணாக கதைகேற்றபடி இயல்பான நடிக்கிறார் ..


ஒடுக்கப்பட்ட இனத்தின் இளைஞராக கென் கருணாஸ் , பண்ணை முதலாளியாக வரும் போஸ் வெங்கட் , கம்யூனிச தலைவராக நடித்திருக்கும் கிஷோர்,இயக்குநர் அனுராக் காஷ்யப், தலைமை செயலாளராக நடித்திருக்கும் ராஜீவ் மேனன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் , இயக்குனர் தமிழ் , சேத்தன், , வின்சென்ட் அசோகன் , இளவரசு என அனைவரும் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர் .


இளையராஜாவின் இசையில் பாடல்களுடன் பின்னணி இசையும்

ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


 கம்யூனிச கொள்கை ,தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கியாளும் முதலாளித்துவமான சர்வாதிகாரம் , ஜனநாயகம்என அழுத்தம் நிறைந்த கதையுடன் ஆயுதம் ஏந்தி போராடும் போராளிகளையும் அதை ஒடுக்க முயற்சிக்கும் போலீசையும் மையமாக கொண்ட திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.


ரேட்டிங் : 3 .5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page