திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் உபேந்திரா இயக்கிய திரைப்படம் ஒன்று திரையரங்கில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் தான் செய்வது என்னவென்று தெரியாமல் பைத்தியம் பிடித்தவர்கள் போல மாற,,, படம் பார்க்கும் சில பேர் மனதில் நினைத்ததை உடனடியாக நிறைவேற்றுபவர்களாக
மாறுகிறார்கள்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை ஒரு தரப்பு கொண்டாட மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்நிலையில் ஒரு செய்தி நிறுவனம் முன்னணி திரைப்பட விமர்சகரான முரளிசர்மாவை இப் படத்தின் விமர்சனத்தை எழுதி தர சொல்ல ,, ஆனால் முரளிசர்மா இத்திரைப்படத்தை 4 முறை பார்த்த பிறகும் விமர்சனம் எழுத முடியாமல் குழம்புகிறார் .
தன் குழப்பத்துக்கான தீர்வை காண விமர்சகர் முரளிசர்மா இயக்குனர் உபேந்திராவை தேடி அவர் இருக்கும் இடத்துக்கு செல்கிறார்.
முடிவில் விமர்சகர் முரளிசர்மா இயக்குனர் உபேந்திராவை நேரில் சந்தித்து விமர்சனத்தை எழுதினாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’யுஐ’ (UI)
கதையின் நாயகனாக நடித்திருக்கும் உபேந்திரா இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.
அமைதியான சுபாவம் கொண்ட கதாபாத்திரமான சத்யா மற்றும் மிரட்டலான கதாபாத்திரமான கல்கி பகவான் என இரு வேடங்களிலும் வித்தியாசப்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகியாக நடித்திருக்கும் கவர்ச்சியான ரீஷ்மா நானையா நாயகன் சத்யாவை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
திரைப்பட விமர்சகராக நடித்திருக்கும் முரளி சர்மா, உபேந்திராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ், ரவி சங்கர், சது கோகிலா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையும், ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுவின் ஒளிப்பதிவும் சிறப்பு .
உலகளாவிய நுண்ணறிவு எனும் பொருள்படும் யுனிவர்சல் இண்டலிஜென்ஸ் என்ற சொல்தான் யுஐ’
படம் தொடங்கும்போதே நீங்கள் புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்லிவிட்டுத் திரையிடப்படும் படம் யு ஐ.
ஜாதி, மதம் இல்லாமல் ஒற்றுமையாகவும், அன்பாகவும் வாழும் மக்களை கதையின் நாயகன் கதாபாத்திரமான சத்யா விரும்புவதை போலவும் , மூட நம்பிக்கையான கடவுள் பெயரால் எல்லோரும் செய்யும் அராஜகங்களை மற்றொரு கதாபாத்திரமான கல்கி மூலம் சொல்வதுடன் புதுமையான திரைக்கதையில் வித்தியாசமான கதையமைப்புடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் உபேந்திரா
ரேட்டிங் - 3 / 5
Comments