பெரும் செல்வந்தரான மேத்யூ வர்கீஸ் மற்றும் அனுபமா குமாரின் மகனான நாயகன் அன்சன் பால் ஒழுங்காக படிக்காததால் பட்டப்படிப்பை முடிக்காமல் வெட்டியாக எந்த வேலைக்கும் செல்லாமல், தனது பெற்றோர்களின் பணத்தில் நண்பர்களுடன் சுற்றி வருகிறார்.
அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு படிப்பதற்கான முயற்சியில் இருக்கும் நாயகி ரெபா ஜானை கண்டதும் காதல் கொள்வதோடு, அவர்தான் தன் வாழ்க்கை என நாயகி ரெபா ஜானை பின் தொடர்கிறார் .
ஒருநாள் ரெபா ஜானிடம்டம் தனது காதலை சொல்லுகிறார். நாயகி ரெபா ஜான் அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.
என் மீது உனக்கு காதல் வரும் வரை காலமெல்லாம் காத்திருப்பேன் என ரெபா ஜானிடம் கூறிஅவரை விட்டு விலகி செல்கிறார் நாயகன் அன்சன்பால்.
சில நாட்கள் கடந்த நிலையில் அன்சன் பாலின் நல்ல குணத்தைக் கண்டு அவர் மீது ரெபா ஜானுக்கு காதல் வர தனது காதலை அன்சன் பாலிடம் சொல்ல நினைக்கும்போது இருவரும் ஒரே நேரத்தில் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர் .
முடிவில் காதலர்கள் அன்சன் பால் – ரெபாஜான் இருவரது காதல் வெற்றி பெற்றதா ?
இவர்களது காதலை இருவரின் பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’மழையில் நனைகிறேன்’
மலையாள சினிமாவில் அறிமுகமாகி கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தமிழில் நாயகனாக நடித்திருக்கும் அன்சன் பால் பணக்கார வீட்டு இளைஞனாகவும், காதலுக்காக தன் காதலியிடம் உருகும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார் .
அசத்தும் அழகில் நாயகி ரெபா ஜான் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ் மற்றும் அம்மாவாக நடித்திருக்கும் அனுபமா குமார், நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சங்கர் குரு ராஜா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் இயல்பு .
விஷ்ணு பிரசாத் இசையில் பாடல்களும்,பின்னணி இசையும் , ஜெ.கல்யாண் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
இயல்பான காதல் கதையை மையமாக வைத்து படத்தின் முதல்பாதி காதல் , பிரிவு , விபத்து என செல்ல இரண்டாம் பாதி காதல் திருமணம், வாழ்க்கை பயணம் என ஒரு அழகான காதல் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சுரேஷ் குமார் .
ரேட்டிங் - 3 / 5
Commentaires