மனநல பாதிப்படைந்தவர்களை காப்பாற்றி அவர்களை பராமரிக்கும் காப்பகத்தை நடத்தி வரும் சமுத்திரக்கனி காரில் செல்லும்போது வழியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்,அழுக்கு உடையுடன் பல நாள் வழிக்காமல் இருக்கும் தாடி முடியுடன் குப்பையில் இருப்பதை சாப்பிடும் தம்பி ராமையாவை அரவணைத்து தனது காப்பகத்திற்கு அழைத்து வந்து பராமரிக்கிறார்.
அப்போது அவரது பையில் இருக்கும் ஒரு டைரியை படிக்கும் போது, பல தொழில்களுக்கு சொந்தக்காரரான மிக பெரிய கோடீஸ்வரர் முருகப்பா குரூப்பின் முதலாளிதான் தம்பி ராமையா என்பது சமுத்திரகனிக்கு தெரிய வருகிறது.
சபல புத்தியில் பெண்கள் மீதான மோகத்தினால் ஒரு கொலை குற்றத்தில் கைதாகி சிறையில் இருக்கும்போது ,,,,, உழைப்பால் உயர்ந்து தான் வாழ்ந்த வாழ்க்கையையும் , தன்னுடைய கௌரவம் அந்தஸ்து ,பண பலம் அனைத்துமே பறிகொடுத்து தான் சந்தித்த மிக பெரிய சறுக்கலை டைரியில் சுய சரிதையாக எழுதுகிறார் தம்பி ராமையா .
தம்பி ராமையாவின் சுய சரிதையை முழுவதும் படித்த சமுத்திரக்கனி இறுதியில் தம்பி ராமையா குடும்பத்தினர் வசிக்கும் இடத்திற்கு தம்பி ராமையாவை அழைத்து செல்கிறார் .
முடிவில் சமுத்திரக்கனியின் ஆதரவினால் மீண்டும் தன் குடும்பத்துடன் தம்பி ராமையா இணைந்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘’ராஜா கிளி’’’
மனநலம் பாதிக்கப்பட்டவராக அறிமுகமாகும் தம்பி ராமையா, உடைகளால் அழுக்கு படிந்த கதாபாத்திரத்தை தன் அனுபவ நடிப்பிலும், முருகப்பன் சென்றாயர் என்ற செல்வந்தராக அறிமுகமாகும்போது நடை, உடை, கம்பீரம் என அனைத்திலும் வேறுப்படுத்தி சபல புத்தியை வெளிபடுத்தும் காட்சிகளிலும் இளமை துள்ளலுடன் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .
முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி சமுக பொறுப்புள்ள நல்ல மனிதராக இயல்பான நடிப்பில் நடிக்கிறார் .
தம்பி ராமையாவின் மனைவியாக நடித்திருக்கும் தீபா ஷங்கர்,தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் சுபா, இளம் காதலியாக நடித்திருக்கும் சுவேதா ஸ்ரீரிம்ப்டன், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள்தாஸ், பழ கருப்பையா, டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா, வெற்றிகுமரன், விஜே ஆண்ட்ருஸ், மாலிக், , கிரிஷ், கிங் காங் என நடித்த நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர் .
இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் தம்பி ராமையாவின் பாடல்களும் . பின்னணி இசையமைத்திருக்கும் சாய் தினேஷ் இசையும்
ஒளிப்பதிவாளர்கள் கேதார்நாத்-கோபிநாத் ஆகியோரது ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
உழைப்பால் உயர்ந்து தெய்வ பக்தியும் ,தனி மனித ஒழுக்கமும் நிறைந்த ஒரு மனிதனை சபலத்தினால் பெண்கள் மிதான மோகம் மிக பெரிய சறுக்கலில் அவனது வாழ்க்கை சீரழிந்து குடும்பத்தினர் ஆதரவில்லாமல் யாருமில்லாத அனாதையாக மாறுவதை கதையாக வைத்து படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இன்றைய தலைமுறையினருக்கான படமாக பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் உமாபதி ராமையா .
ரேட்டிங் - 3 . 5 / 5
댓글