top of page
mediatalks001

‘எக்ஸ்ட்ரீம்’ - விமர்சனம் !



சென்னைக்கு அருகே உள்ள அத்திப்பட்டு பகுதியில் கட்டுமான பணி நடக்கும் கட்டிடம் ஒன்றில் இருக்கும் தூணில் புதைக்கபட்ட நிலையில்  ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. 


இக் கொலை வழக்கு திருமுல்லைவாயல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருக்கும் ராஜ்குமார் நாகராஜிடம் மேலிடம் ஒப்படைக்க ,,,உதவி பெண்  இன்ஸ்பெக்டரான ரச்சிதா மகாலட்சுமி துணையுடன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில் போலீஸ் விசாரணை மேற்கொள்ளும்போது  அடுக்கு மாடி குடியிருப்பில் படிக்கும் வயதில்,,, வீட்டு வேலை செய்யும் இளம் பெண் அபி நட்சத்திரா என்பதை  காவல்துறை கண்டுபிடிக்கிறது. 


தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறைக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்க, முடிவில்  கொலைக்கான பின்னணி என்ன ?

அந்த இளம்பெண்ணை கொலை செய்த கொலையாளி யார் ? என்பதை மிக சாமர்த்தியமாக காவல் துறை கண்டுபிடிக்கும் படம்தான்  ‘எக்ஸ்ட்ரீம்’


போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜ்குமார் நாகராஜ்  கதைகேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சின்னத்திரை பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி, போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கிறார்.  

கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, 

கவர்ச்சியில் இளசுகளை ஏங்க வைக்கும் நாயகி அம்ரிதா ஹல்டர்,  

வில்லனாக நடித்திருக்கும் சிவம் தேவ், ஆனந்த் நாக், அபி நட்சத்திராவின் அம்மாவாக நடித்திருக்கும் சரிதா, ராஜ்குமார் நாகராஜின் மனைவியாக நடித்திருக்கும் ராஜேஸ்வரி ராஜி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரது நடிப்பும் சிறப்பு . 


ஒளிப்பதிவாளர் டிஜே பாலா, இசையமைப்பாளர் எம்.எஸ்.ராஜ்பிரதாப், படத்தொகுப்பாளர் ராம்கோபி ஆகியோரது பணி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


பொது இடங்களில் மற்றவர்கள் பார்ப்பது போல சில பெண்கள் ஆபாசமாக ஆடையுடன் திரிவது அதனை விட சமூக வலைதளப் பக்கங்களில் சில பெண்கள் செய்யும் அக்கிரமங்களை மையமாக கொண்ட கதையுடன் அந்த பெண்களால் அப்பாவி பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை திரைக்கதையில்  அழுத்தமாக சொல்வதுடன் சுவாரஸ்மான கிரைம் திரில்லராக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா.


ரேட்டிங் -  2.5  /  5


Comments


bottom of page