top of page

’மெட்ராஸ்காரன்’ - விமர்சனம் ! 3. 5 / 5

mediatalks001

சென்னையில் வாழும் பாண்டியராஜன் -கீதாகைலாசத்தின் மகனான நாயகன் ஷேன் நிகம் நாயகி நிஹாரிகா கொனிடேலாவை காதலிக்கிறார் .


இருவரது காதலை ஏற்றுக் கொண்ட பெற்றோர்களின் ஆதரவுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்தில் திருமணத்தை விமர்சையாக நடத்த முடிவு செய்கிறார் ஷேன் நிகம்.

திருமணத்திற்காக சொந்த உறவுகள் அனைத்தும் சந்தோசமாக ஓன்று கூடி அந்த இடமே கோலாகலமாக இருக்கிறது .


இந்நிலையில் திருமணத்திற்கு முதல்நாள் காதலி நிஹாரிகா கொனிடேலாவை பார்ப்பதற்காக அவர் தங்கி இருக்கும் இடத்திற்கு காரில் பேசி கொண்டே செல்லும் நாயகன் ஷேன் நிகம் வழியில் குறுக்கே நாய் வர ,,,,,அந்த ஊரின் தாதாவான கலையரசன் மனைவி நிறைமாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா தத்தாவின் மீது காரில் மோதி விடுகிறார் .


ஐஸ்வர்யா தத்தாவின் உறவுகளுடன் மிக பெரிய கூட்டமே அங்கு கூடி விட,,,, மருத்துவமனையில் சேர்க்கப்படும்ஐஸ்வர்யா தத்தாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை இறந்து விடுகிறது.


திருமண மாப்பிள்ளையான ஷேன் நிகம் தன் காதலியை திருமணம் செய்து கொள்ளாமல் செய்த குற்றத்திற்காக இரண்டு வருட தண்டனையாக சிறைக்கு செல்கிறார்


இரண்டு வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் நாயகன் ஷேன் நிகம்மை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது .


இதில் ஷேன் நிகம்மின் சகோதரியின் கணவர் கருணாசை அந்த கும்பல் வெட்டி விட தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார் கருணாஸ்.


அந்த தனியார் மருத்துவ மனையில் வேலை பார்க்கும் பெண் மூலம் ஐஸ்வர்யா தத்தாவின் குழந்தை இறப்பிற்கு தான் காரணம் இல்லை என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார் நாயகன்ஷேன் நிகம்.


நாயகி நிஹாரிகா கொனிடேலாவும் ஷேன் நிகம்மை நிராகரித்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள,,,,

நிலை குலைந்து போகும் ஷேன் நிகம் குழந்தை இறப்பிற்கு யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ள தாதாவான கலையரசன் இருக்கும் இடத்திற்கு செல்கிறார் .


 முடிவில் நாயகன் ஷேன் நிகம் ஐஸ்வர்யா தத்தாவின் குழந்தை இறந்ததற்கு காரணமான மர்ம நபரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’மெட்ராஸ்காரன்’ .


கதையின் நாயகனான மலையாள நடிகரான ஷேன் நிகம் இயல்பான நடிப்பில் காதல், நடனம்,, செண்டிமெண்ட் ,ஆக்க்ஷன் என அனைத்திலும் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டை பெறுகிறார் .


நாயகியாக நடித்திருக்கும் நிஹாரிகா கொனிடேலா கவர்ச்சியாக ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் இருந்தாலும் கவனிக்கும்படி நடிக்கிறார் .


கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன் ,கலையரசனின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, நாயகனின் தாய் மாமனாக நடித்திருக்கும் கருணாஸ், அப்பாவாக நடித்திருக்கும் பாண்டியராஜன், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், சூப்பர் சுப்பராயன் ,அத்தையாக நடித்திருக்கும் தீபா ஷங்கர் , நண்பராக நடித்திருக்கும் லல்லு, ராஜா ராணி பாண்டியன் என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத் தியுள்ளனர்


இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் ’தை தக்க கல்யாணம்’ திருமண பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம் பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறு உள்ளது.


ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு பக்கபலமாக இருக்கிறது.


திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தான் செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு சென்று வாழ்க்கை இழந்து நிற்கும் நாயகனின் கதையை மையமாக வைத்து விறு விறுப்பான திரைக்கதையில் எதிர்பாராத திருப்புமுனையான கிளைமாஸ்க்குடன் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வாலி மோகன் தாஸ் .


ரேட்டிங் - 3. 5 / 5

Comentários


bottom of page