கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதியில் பிறவியில் இருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான அருண்விஜய் தன் தங்கை ரிதாவுடன் வாழ்ந்து வருகிறார்.
சுனாமியால் பெற்றோர்களை இழந்த வெவ்வேறு குழந்தைகளான இருவரும் அண்ணன் -தங்கையாக சிறிய வயதிலிருந்து ஒன்றாக வளர்கின்றனர் .
இந்நிலையில் அருண்விஜய் கிணற்றில் இறங்கி தூர் வாருவது முதல் சுற்றுலா பயணிகள் செல்லும் படகில் துணைக்கு செல்வது , ஐஸ் வியாபாரம் செய்வது என கிடைக்கின்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார் .
இந்நேரத்தில் அருண்விஜய் தங்கை ரிதாவுடன் வெளியே செல்லும்போது திரு நங்கைகளை ஒரு ரவுடி கும்பல் அடித்து நொறுக்க,,,, கடுங்கோபத்தில் அவர்களை அடித்து பந்தாடுகிறார் .
இந்த பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று மாற்றுத்திறனாளி என்பதால் நிதிபதியால் விடுவிக்கப் படுகிறார் .
அதே இடத்தில் விவேகானந்தர் பாறை பகுதியில் டூரிஸ்ட் கைடாக, பல மொழிகள் கற்றவராக அருண் விஜய்யைத் துரத்தித் துரத்திக் காதலிப்பவராக இருக்கிறார் ரோஷினி பிரகாஷ்.
அட்டுழியங்களை பார்க்கும்போது எப்பொழுதும் அடிதடியில் இறங்கும அருண்விஜய்யை நல்வழிப்படுத்த, அவரை மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவற்றோர் இல்லத்தில் வாட்ச்மேனாக வேலைக்குச் சேர்த்துவிடுகிறார் அருண் விஜய் மீது பிரியம் கொண்ட சர்ச் ஃபாதர்.
சாயா தேவி பொறுப்பாளராக உள்ள அந்த காப்பகத்தில் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்கள் குளிப்பதை குளியல் அறையில் காப்பகத்தில் வேலை செய்யும் மூன்று பேர் பார்க்கின்றார்கள்.
இதனைக் கண்டுபிடித்த மாற்றுத் திறனாளி பெண்கள், தாங்கள் குளிப்பதை யாரோ பார்த்துவிட்டார்கள் என அருண்விஜய்யிடம் சொல்ல அந்த முன்று பேரையும் பார்க்கும் அருண்விஜய் முதலில் இருவரை கொடுரமாக கொலை செய்கிறார்.
அதன் பின் தான் செய்த கொலைகளை ஒப்பு கொண்டு காவல் நிலையத்தில் தானே சரண்டர் ஆகிறார் .
இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனியின் விசாரணையில் அருண்விஜய் கொலைக்கான காரணத்தை அவரிடம் சொல்ல மறுப்பதால் பெயிலில் சிறையில் இருந்து வெளியே வருகிறார் அருண்விஜய் .
வெளியே வரும் அருண்விஜய் . இருவரது கொலைகளுக்கு பின் மூன்றாவது நபரையும் கண்டுபிடித்து அவனையும் தலைகீழாக நிர்வாணமாக மரத்தில் தொங்க விட்டு கொடுரமான முறையில் கொலை செய்கிறார் .
பரபரப்பான சூழ்நிலையில் முன்றாவது நபரை கொலை செய்த அருண்விஜய்யை கைது செய்து நீதிபதி மிஷ்கின் முன்னிலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார் சமுத்திரக்கனி .
முடிவில் வழக்கின் இறுதி தீர்ப்பில் மூன்று கொலைகளை செய்த அருண்விஜய்க்கு நீதிபதி மிஷ்கின் கொடுத்த தண்டனை என்ன ?
அருண்விஜய் செய்த கொலைகளுக்கான காரணத்தை சமுத்திரக்கனி தெரிந்து கொண்டாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘’வணங்கான்’’
கதையின் நாயகனாக காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக பாராட்டும்படியான நடிப்பில் அசத்துகிறார் அருண்விஜய். குறிப்பாக ஆக்க்ஷன்காட்சிகளில் அதிரடிநாயகனாக பட்டையை கிளப்புகிறார் .
நாயகியாக ரோஷினி பிரகாஷ் துறு துறு பெண்ணாக கதைகேற்றபடி சிறப்பாக நடிக்கிறார் .
தங்கையாக வரும் ரிதா இயல்பான நடிப்பில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
மற்றும் படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர் .
ஜி வி பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்களும் , சாம் சி எஸ்ஸின் பின்னணி இசையும் கதையின் வேகத்திற்கு இணையாக இருக்கிறது .
ஒளிப்பதிவாளர் குருதேவின் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும் , சில்வா மாஸ்டரின் மிரட்டலான ஆக்க்ஷனும் படத்திற்கு கூடுதல் பலம் .
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சந்திக்கும் அக்கிரமமான பிரச்சனைகளை கதையாக கொண்டு வேகதடையில்லாத விறு விறுப்பான திரைக்கதையில் சில காட்சிகளில் கேலி ,நையாண்டி தனமான வசனங்களுடன் எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு தன் வழக்கமான முத்திரையை பதிக்கிறார் இயக்குனர் பாலா .
ரேட்டிங் - 3.5 / 5
Comments