ஆந்திர பிரதேச முதலமைச்சராக இருக்கும் ஸ்ரீகாந்த்துக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் ஜெயராம், இளையவர் எஸ் ஜே சூர்யா .
ஸ்ரீகாந்த் இருக்கும்போதே அவருக்கு பிறகு முதலமைச்சர் பதவி யாருக்கு? என்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், புதிதாக பதவி ஏற்கும் மாவட்ட கலெக்டர் ராம்சரண், தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் முதல்வரின் இளைய மகனான அமைச்சர் எஸ்.ஜே.சூர்யாவின் மோசடிகளை கட்டுபடுத்த , அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
இதற்கிடையே, உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா செய்யும் மோசடியால் அவரை அடிப்படை பதவியிலிருந்து விலக்குகிறார்.
ஆத்திரமடையும் எஸ்.ஜே.சூர்யா மருத்துவ மனையில் அவரை கொலை செய்து விடுகிறார்.
நான் தான் அடுத்த முதலமைச்சர் என எஸ்.ஜே.சூர்யா கட்சி பொது குழுவில் அதிகார பூர்வமாக அறிவித்துவிட்டு நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்று கொள்ளும் சமயத்தில் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், இறந்த முதலமைச்சர் ஸ்ரீகாந்த் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு இறந்துள்ளார். அதில் ராம்சரண் தான் அடுத்த முதல்வர் என்று கூறியிருக்கிறார்.
இதனால் எஸ்.ஜே.சூர்யா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட, அதே சமயம் ராம்சரணையும் முதல்வராக விடாமல் தடுக்கும் முயற்சிகளில் எஸ்.ஜே.சூர்யா ஈடுபடுகிறார்.
முடிவில் ராம்சரண் ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டாரா ? ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஸ்ரீகாந்த் எனா காரணத்திற்காக ராம்சரணை முதல்வராக தேர்ந்தெடுத்தார் ? என்பதை சொல்லும் படம்தான் ’கேம் சேஞ்சர்’
நாயகன் ராம்சரண். அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் மக்களுக்கான போராளியாக அப்பா வேடத்தில் பேச்சு, உடல்மொழி என் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மகன் வேடத்தில் நேர்மையான மாவட்ட கலெக்டர் வேடத்தில் அதிரடி ஆக்க்ஷன் நாயகனாக இரண்டு கதாபாத்திரங்களையும் வித்தியாசப்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தியுள்ளார்
இயல்பான நடிப்பில் கதைகேற்றபடி நாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, .அப்பா ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலி
மிரட்டும் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, மாவீரன் மாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய்ராம்,ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், நவீன் சந்திரா, பிரம்மானந்தம் என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் இசையில் பாடல்களும் . பின்னணி இசையும் , ஒளிப்பதிவாளர் திருவின் பிரம்மாண்ட ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
நேர்மையான அரசு அதிகாரிக்கும், உழல் மோசடிகளில் பெயரெடுத்த அரசியவாதிக்கும் நடக்கும் மோதலை மையமாக கொண்ட கதையுடன் வழக்கமான ஃபார்மூலாவில், பாடல்கள், குடும்ப அரசியல் , அரசு அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்கும் காட்சிகளுடன் ,காதல், காமெடி , செண்டிமெண்ட் என அனைத்தையும் கலந்து ஒரு அதிரடி திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்
ரேட்டிங் : 3 / 5
Comments