நாயகன் டோவினோதாமஸ் ஒரே குடும்பமாக இரண்டு தங்கைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் துணிக்கடை ஒன்றில் இளம் பெண் ஆடை மாற்றுவதை அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் செல்போன் மூலம் ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வரும் ஒருவரை எரித்துக் கொன்று விடுகிறார் டோவினோதாமஸ்.
இந்நேரத்தில் இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்து விடுகிறார் திரிஷா. சம்பவத்தை நேரில் பார்த்த சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கி விடுகிறார்.
அந்த கொலையாளியை நேரில் பார்த்த சாட்சியான திரிஷா மூலம் போலீஸ் அதிகாரி வினய் ராய் , குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து அவர்களை அப்படியே வரையும் அதீத திறன் படைத்த டோவினோ தாமஸின் உதவியை நாடுகிறார்.
முடிவில் டோவினோதாமஸ் போலீஸ் அதிகாரியான வினய் ராய்க்கு அவர் எதிர்பார்த்த உதவி செய்தாரா?
டோவினோ தாமஸ் எரித்து கொலை செய்த குற்றவாளிக்கும் வினய்ராய் க்கும் தொடர்பு உள்ளதா? என்பதை சொல்லும் படம்தான் ’ஐடென்டிட்டி’
ஹரன் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டோவினோ தாமஸ் முதல்பாதி அமைதியானவராகவும் இரண்டாம் பாதி அதிரடி நாயகனாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
நாயகியாக நடித்திருக்கும் த்ரிஷா விபத்தால் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட கதாபத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கதை அடுத்த கட்டத்திற்கு நகர துணை நிற்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் வினய்ராய் நல்லவரா கெட்டவரா என்று யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு வித்யாசமான கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் , அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவும் பட த்திற்கு பக்க பலமாக உள்ளது.
இன்றைய சமூகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு சஸ்பென்ஸ்,திரில்லர் கதையை யாரும் யூகிக்க முடியாத விதத்தில் உருவாக்கியிருக்கிறார்கள் இயக்குனர்கள் அகில் பால் & அனஸ் கான்
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான கதையை சுவாரஸ்யம் குறையாமல் அனைவரும் ரசிக்கும்படி எடுத்ததற்கு இயக்குனர்களை நிச்சயம் பாராட்டலாம் .
ரேட்டிங் - 3.5 / 5
Comments