
மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரியாக விசாகப்பட்டினத்தில் பணிபுரியும் நாயகன் கிஷன் தாஸ் ஒரு ஆபரேஷனில் குற்றவாளிகளுடன் சண்டையிடும்போது தன்னுடன் வேலை பார்க்கும் சக நண்பரை தெரியாமல் சுட்டு விடுகிறார்,
கிஷன் தாஸ் தெரியாமல் செய்த தவறினால் மேலிடம் அவரை இடைக்கால பணிநீக்கம் செய்கிறது.
மற்றொரு பக்கம் சென்னையில் நாயகி ஸ்ம்ருதி வெங்கட் நண்பன் ராஜ் ஐயப்பனுடன் இரவு நேரத்தில் காரில் செல்லும்போது ஒரு விபத்தில் சிக்குகிறார்.
இருவரும் சிறிய காயங்களுடன் விபத்தில் இருந்து தப்பிக்கிறார்கள் .
பணி நீக்கத்தினால் ஓய்விலிருக்கும் கிஷன் தாஸ் – ஸ்ம்ருதி வெங்கட் இருவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கிறார்கள்.
சிறிது காலம் நட்பாக பழக ஆரம்பித்து காதலிக்க தொடங்குகிறார்கள். அவர்களது பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.
இதனையடுத்து சில தினங்களில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கும் நிலையில் ஸ்ம்ருதி வெங்கட் நண்பரான ராஜ் ஐயப்பனுக்கு இவர்களது காதல் பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி ஸ்ம்ருதி வெங்கட்டை அடைய நினைக்கிறான்.
திருமண நிச்சயம் நடைபெற சில நாட்கள் இருக்கும் சமயத்தில் ஸ்ம்ருதி வெங்கட் வீட்டில் ராஜ் ஐயப்பன் இறந்து கிடக்கிறார்.
செய்வதறியாமல் அதிர்ச்சியடையும் ஸ்ம்ருதி வெங்கட் உடனடியாக வருங்கால கணவன் நாயகன் கிஷன் தாசை வீட்டிற்கு வரவழைக்க , ஸ்ம்ருதி வெங்கட்டை இப் பிரச்சனையிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்கிறார் நாயகன் கிஷன் தாஸ் .
முடிவில் ஸ்ம்ருதி வெங்கட் வீட்டில் ராஜ் ஐயப்பன் பிணமாகி கிடப்பதற்கான காரணம் என்ன?
நாயகன் கிஷன் தாஸ் நாயகி ஸ்ம்ருதி வெங்கட்டை இந்த பிரச்சனையில் இருந்து சாமர்த்தியமாக எப்படி காப்பாற்றினார் என்பதை சொல்லும் படம்தான் ’தருணம்’ .
மத்திய ரிசர்வ் சிஆர்பிஎப் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நாயகன் கிஷன் தாஸ் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதல், ஆக்க்ஷன் , ரொமான்ஸ் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் ஸ்ம்ருதி வெங்கட்இயல்பான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்.
முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் , அவரது அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பாலசரவணன் என படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் கதைகேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் . .
இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அஸ்வின் ஹேமந்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு சிறப்பு .
ஒரு கொலை அந்த கொலையை மறைக்க நாயகன் எடுக்கும் முயற்சிகளை மையமாக கொண்ட கதையுடன் நேர்த்தியான திரைக்கதை அமைப்பில் சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் படமாக திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அரவிந்த் ஸ்ரீநிவாசன்.
ரேட்டிங் - 3. 5 / 5
Comments