
கல்லூரியில் படிக்கும்போதே நாயகன் ஆகாஷ் முரளி மற்றும் நாயகியான அதிதி ஷங்கர் இருவரும் காதலர்களாக காதலித்து வருகின்றனர்.
காதலர்களுக்குள் அவ்வப்போது சிறு சண்டைகளும் வந்துக்கொண்டு இருக்கும்போது திடீரென
காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரின் காதல் காதல் முறிவடைந்து ஆகாஷ் முரளியும், அதிதி ஷங்கரும் பிரிந்து விடுகின்றனர் .
இந்நிலையில் அதிதி ஷங்கர் போர்ச்சுகல் நாட்டில் வேலை கிடைக்கிறது. இதனால் அவர் அங்கு செல்கிறார்.
சில வருடங்களுக்கு பிறகு ஆகாஷ் முரளிக்கு காதலி அதிதி ஷங்கரை பற்றிய ஒரு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது.
போர்ச்சுகல் நாட்டில் உள்ள பெரிய தொழிலதிபரை கொலை செய்த குற்றத்திற்காக அதிதி ஷங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
இந்த தகவலை தெரிந்துக் கொண்ட ஆகாஷ் முரளி காதலியான அதிதி ஷங்கரை காப்பாற்ற போர்ச்சுகல் நாட்டிக்கு செல்கிறார்.
முடிவில் ஆகாஷ் முரளி கொலை குற்றம் சுமத்தப்பட்ட அதிதி ஷங்கரை காப்பாற்றினாரா ?
தொழிலதிபரை உண்மையில் கொலை செய்தது அதிதி ஷங்கர் தானா ?
தொழிலதிப்ர் கொலையில் அதிதி ஷங்கர் கைதானதின் பின்னணி என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ‘நேசிப்பாயா’.
கதையின் நாயகனாக நடிக்கும் ஆகாஷ் முரளி கதையுடன் இணைந்து காதல் ,ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
ஆக்ஷன் நாயகனுக்கான அத்தனை அம்சங்களும் கொண்ட ஆகாஷ் முரளி தமிழ் திரையுகின் தவிர்க்க முடியாத நாயகனாக நிச்சயம் உருவெடுப்பார்.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர் கதைகேற்றபடி இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார் .
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், குஷ்பு சுந்தர் , ராஜா, இளைய திலகம் பிரபு, ஷிவ் பண்டிட் கல்கி கோய்ச்லின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது அனுபவமான நடிப்பில் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு பக்க பலமாக இருக்கிறது .
ஒளிப்பதிவாளர் கேமரான் எரிக் பிரைசன் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம் , ஹாலிவுட் படங்களின் பாணியில் சேசிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது .
படத்தொகுப்பாளர் ஏ.ஸ்ரீகர்பிரசாத்தின் படத்தொகுப்பு சிறப்பு .
மென்மையான இயல்பான காதல் கதையில், நேர்த்தியான திரைக்கதை அமைப்பில் ஹாலிவுட் பட பாணியில் மிரட்டலான ஆக்ஷனுடன் சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக அனைவரும் ரசிக்கும் விதத்தில் பிரம்மாண்டமான கமர்ஷியல் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விஷ்ணு வர்தன்.
ரசிகர்கள் நேசிக்கும் காதலுடன் சேர்ந்த ஆக்க்ஷன் படம் ''நேசிப்பாயா''
ரேட்டிங்- 3.5 / 5
Comments