top of page

‘காதலிக்க நேரமில்லை’ - விமர்சனம் !

mediatalks001

பெங்களூரில் வசிக்கும் நாயகன் ஜெயம் ரவியும் – டிஜே பானுவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் குழந்தை வளர்ப்பு என்ற அர்ப்பணிப்பில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பாத ஜெயம் ரவி திருமணம் செய்துக்கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.


இதனையடுத்து ஜெயம் ரவி தன் நண்பர்களான வினய் ராய் , யோகி பாபுவுடன் சேர்ந்து விந்தணு தானம் செய்ய முடிவு செய்கிறார்.


இந்நேரத்தில் ஜெயம் ரவி – டிஜே பானு இருவருக்குமே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நடக்காமல் போகிறது.


மறுபக்கம் கட்டிடக் கலை நிபுணரான நித்யா மேனன் பெற்றோருடன் சென்னையில் வசித்து வருகிறார். திருமணம் செய்துக் கொண்டு உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் நாயகி நித்யா மேனன், தன் காதலன் செய்த துரோகத்தால் அவரை விட்டு பிரிகிறார் . டெஸ்ட் ட்யூப் எனப்படும் செயற்கை கருத்தரிப்பு மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்கிறார்.



குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்ற தனது முடிவால் காதலியை பிரிந்த ஜெயம் ரவியும், துரோகத்தால் ஆண்களை வெறுத்தாலும் தன்னுடைய வாழ்க்கைக்கு குழந்தை முக்கியம் என்று நினைத்த நித்யா மேனனும், சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்திக்கிறார்கள்.


எட்டு வருடங்களுக்கு பிறகு வேலை விஷயமாக சென்னை வரும் ஜெயம் ரவி ஒரு நாள் நித்யா மேனனை மீண்டும் சந்திக்க அவர்களது நட்பு காதலாக மாறும்போது நிச்சயதார்த்தம் அன்று காணாமல் போன முன்னாள் காதலி டிஜே பானு ஜெயம் ரவி வாழ்க்கையில் வருகிறார்.


முடிவில் முன்னாள் காதலி டிஜே பானு ஜெயம் ரவியை சந்தித்ததன் காரணம் என்ன ?

நித்யா மேனனை காதலித்த ஜெயம் ரவி அவரை திருமணம் செய்து கொண்டாரா? இல்லையா?

என்பதை வருங்காலங்களில் ஆண் - பெண் உறவில் திருமணம் என்ற சம்பிரதாயம் தேவையே இல்லை என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்தும் படம்தான் ‘காதலிக்க நேரமில்லை’


நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பின் மூலம் வழக்கமான பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்துகிறார் .


துணிச்சலான கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன் மற்றும் டிஜே பானுவும் கதைகேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் .


லால் , வினய் ராய் , யோகி பாபு,பாடகர் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி என நடித்த அனைவருமே நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர் .


ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது.


கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.


செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை, தன்பாலின உறவு திருமணம், அதனை ஆதரிக்கும் மக்கள் என தற்போது நடைமுறையில் இருக்கும் இந்த கலாச்சார வர்க்கத்தை பற்றிய கதையை கொண்டு ஆண் - பெண் திருமண பந்தத்தில் மாட்டி கொள்ளாமல் பிரச்சனையில்லாமல் சந்தோசமாக வாழ்வது எப்படி என்பதை திரைக்கதையில் அழுத்தமாக சொல்லி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.


ரேட்டிங் - 2.5 / 5

Comments


bottom of page