
பொள்ளாச்சியில் வாழ்ந்து வரும் சுரபி தியேட்டர் உரிமையாளரான நாசரின் மகன் ஆரவ் பள்ளி பருவத்தில் யானை பொம்மைகளின் மேல் அதிக பற்று கொண்டவராக இருக்கிறார் .
ஒரு கட்டத்தில் தன் தாயின் மரணத்தினால் அமைதியாகிவிடும் ஆரவ் காட்டு யானையை வழியில் பார்த்தவுடன் சந்தோஷமாகி விட ,,,,நாசரின் ஒப்புதலுடன் அந்த யானையை பீமா என்கிற பெயருடன் சிறிய வயதிலிருந்து தனது நண்பனாக வீட்டில் செல்லமாக வளர்க்கிறார்
வாலிப வயதில் .ஆரவ்வுடன் சேர்ந்து குடும்பத்தினர் அனைவரும் அந்த யானையுடன் பாசமாக பழகுகின்றனர் .
மற்றொரு பக்கம் ஜாதகத்தின் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் அமைச்சரான கே எஸ் ரவிக்குமார் பிச்சை எடுத்து பிழைப்பை நடத்தும் யோகி பாபுவை மகனாக பாவித்து ஜாதக முறைப்படி அவருடன் இருக்கும் நேரத்தில் ,,, கே எஸ் ரவிக்குமாரின் வலது கரமாக இருக்கும் ஜெயகுமாரின் மகளான நாயகி ஆஷிமா நார்வாலை ஆரவ் காதலிக்கிறார் .
இந்நேரத்தில் முதலமைச்சரான சாயாஜிக்கும் அமைச்சரான கே எஸ் ரவிக்குமாருக்கும் ஏற்படும் பிரச்சனையில் முதலமைச்சரான சாயாஜிக்கு ஆதரவாக கே எஸ் ரவிக்குமாரின் வலது கரமாக இருக்கும் ஜெயகுமார் பதவிக்கு ஆசைப்பட்டு கே எஸ் ரவிக்குமாருக்கு எதிராக அப்ருவராக மாறுகிறார்.
இந்நிலையில் நாயகன் ஆரவ் வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் யானையை வனத்துறை அதிகாரிகள் பிடித்து செல்கின்றனர்.
ஆத்திரமடையும் நாயகன் ஆரவ் வனத்துறை அதிகாரிகளிடம் யானையை அரசு சான்றிதழுடன் முறைப்படி யானையை வளர்ப்பதற்கான உரிமையை வனத்துறை அதிகாரியிடம் சொல்ல ,,, அவர் அனுமதியுடன் மீண்டும் தன் வீட்டிற்கு யானையான பீமாவை அழைத்து செல்ல பார்க்கும்போது தான் வளர்த்த யானை பீமா அங்கு இல்லாமல் வேறொரு யானையை வனத்துறை அதிகாரிகள் அடையாளப்படுத்தி காட்டுவதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.
முடிவில் நாயகன் ஆரவ் வளர்த்த யானை பீமாவை கடத்திய மர்ம நபர் யார் ? என்ன காரணத்திற்காக அந்த யானையை அவர் கடத்தினார் ?கே எஸ் ரவிக்குமாரின் வலது கரமாக இருக்கும் ஜெயகுமார் முதலமைச்சரான சாயாஜிக்கு ஆதரவாக அப்ருவராக மாறினாரா ? இறுதியில் உண்மையான யானை பீமாவை நாயகன் ஆரவ் கண்டுபிடித்தாரா ? இல்லையா என்பதை சொல்லும் படம்தான் ‘’ராஜ பீமா’’
கதையின் நாயகன் ஆரவ் பாசம் , காதல், ஆக்க்ஷன் என கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
நாயகியாக கதைகேற்றபடி நடித்துள்ள ஆஷிமா நார்வால் .யோகி பாபு , வில்லனாக மிரட்டும் கே எஸ் ரவிக்குமார் , நாசர் , சாயாஜி, அருவி மதன் , பாகு பலி பிரபாகர் ,யாஷிகா ஆனந்த் என நடித்த நடிகர்கள் சிறப்பாக நடிக்கின்றனர் .
சைமன் கே கிங் இசையும் ,எஸ் ஆர் சதிஷ்குமார் ஒளிப்பதிவும்,கோபி கிருஷ்ணா பட தொகுப்பும் படத்திற்கு பக்க பலம் .
யானை மேல் பிரியம் கொண்ட நாயகன் அந்த யானையை தன் வீ ட்டில் செல்லமாக் வளர்த்து வரும் கதையை மையமாக வைத்து அரசியல் ,ஜாதகம் , துரோகம் அனைத்தும் கலந்த திரைக்கதையில் மிருகங்களை வைத்து படங்கள் எடுத்த சின்னப்ப தேவர் , ராம நாராயணன் பட வரிசையில் பீமா என்கிற கதாபாத்திரமாக யானையை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நரேஷ் சம்பத் .
ரேட்டிங் - 3 / 5
Comentários