
பிசியோதெரபிக் டாக்டரான நாயகன்பாலாஜி முருகதாஸை காணவில்லை
என போலீஸ் அதிகாரியான ஜேஎஸ்கே விடம் அவரது தந்தை புகார் கொடுக்கிறார்.
அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரியான ஜேஎஸ்கே யாரை விசாரித்தாலும் பாலாஜி முருகதாஸை
நல்ல மனிதர் என அவரிடம் கூறுகின்றனர்.
ஒருகட்டத்தில் அனைவரது பேச்சையும் நம்ப மறுக்கும் ஜேஎஸ்கே தீவிர
விசாரணையில் ஈடுபடும்போது,பாலாஜி முருகதாஸ் காம லீலைகள்
செய்வதில் திறமையானவர் என்று தெரிய வருகிறது.
அவரிடம் சிகிச்சை பெறும் பெண்களிடம் பல ஆசை வார்த்தைகளை கூறி தன் காதல் வலையில் விழ செய்து, பல பெண்களை மயக்கி பலவந்தமாக
பலாத்காரம் செய்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒருபாலியல் பலாத்கார குற்றவாளி என்று போலீஸ் விசாரணையில் தெரிய வரும் சமயத்தில்,,,ஒரு பெரியவர் பிசியோதெரபி டாக்டரானபாலாஜி முருகதாஸை கொன்றுவிட்டதாக போலீசிடம் சரண் அடைகிறார்.
இந்த சமயத்தில் பாலாஜி முருகதாஸின் பெற்றோர் தங்கள் மகன் உயிரோடு இருப்பதாகவும் தங்களிடம் தொலைபேசியில் பேசியதாகவும் போலீசாரிடம் சொல்கிறார்கள்.
முடிவில் உண்மையில் பாலாஜி முருகதாஸ் உயிரோடு இருக்கிறாரா ?
பாதிக்கப்பட்டவர்களில் யாராவது ஒருவர் அவரை கொலை செய்து விட்டார்களா ?
இறுதியில் பாலாஜி முருகதாஸ் தொலைபேசியில் பேசியதாக அவரது பெற்றோர்கள் சொல்வது உண்மையா? என்பதை சொல்லும் படம்தான் ' ஃபயர்'
காசி என்ற கதாபாத்திரத்தில் பிசியோதெரபி டாக்டராக பாலாஜி முருகதாஸ் கதையுடன் இணைந்து காமலீலை செய்யும் காதல் நாயகனாகவும் பல பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து அதை வீடியோ எடுத்து
அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் மிரட்டலான வில்லனாக இயல்பான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .
கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நாயகிகளாக சாந்தினி தமிழரசன், சாக்க்ஷி அகர்வால், ரக்ஷிதா மகாலட்சுமி, காயத்ரி ஷான் என அனைவரும் கதைக்கேற்றபடி தாராளமான கவர்ச்சியில் இளசுகளை ஏங்க வைக்கிறார்கள் .
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ஜே எஸ் கே எதார்த்த நடிப்பில் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார் .
சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி, எஸ்.கே.ஜீவா, அனு விக்னேஷ், குழந்தை மனோஜ் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் டி கே இசையும்,ஒளிப்பதிவாளர் சதிஷின் ஒளிப் பதிவும் படத்திற்கு பக்க பலம் .
பிசியோதெரபி டாக்டர் செய்யும் காம லீலைகளை மையமாக கொண்ட கதையுடன் அனைவரும் ரசிக்கும் படியான திரைக்கதை அமைப்பில் இளைஞர்கள் கொண்டாடும் படமாக படத்தை பாராட்டும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் ஜே எஸ் கே .
ரேட்டிங் - 3.5 / 5
コメント