top of page

‘பேபி & பேபி' - விமர்சனம் !

mediatalks001

ஜமீன் பரம்பரை செல்வந்தரான சத்யராஜ் தன் குடும்பத்தில் ஆண் வாரிசு பெற்றவர்களுக்கே முழு சொத்தையும் கொடுத்து தன் பேரனை தங்க தொட்டிலில் போட்டு விழா கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறார்.


இந்நிலையில் சத்யராஜின் மகனான நாயகன் ஜெய் நாயகி பிரக்யா நாக்ராவை  காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். 

ஜெய், பிரக்யா நாக்ரா தம்பதி சத்யராஜுக்கு பயந்து வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள். 

தன் குடும்ப ஜமீன் பரம்பரைக்கு ஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சத்யராஜுக்கு திருமணம் செய்து கொண்ட மகன் ஜெய்க்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரிய வருகிறது. 

ஆண் குழந்தை பிறந்ததால் ஜெய் மீதான கோபத்தை மறந்துவிட்டு அவரை மீண்டும் ஊருக்கு வரச் சொல்கிறார். 

அதன்படி ஜெய் தனது மனைவி குழந்தையுடன் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு செல்ல முடிவு செய்கிறார்.

 

ஜோதிடத்தின் மீது தீவிர நம்பிக்கை வைத்திருக்கும் இளவரசு, ஜாதகப்படி வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதால், தன் மகன் யோகி பாபுவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். 


வெளிநாட்டில் யோகி பாபு சாய் தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதால், இளவரசு அவர் மீது கோபம் கொள்கிறார். 


இதற்கிடையே, பெண் வாரிசு பிறந்தால் குடும்பம் அமோகமாக இருக்கும் என்று ஜோதிடர் சொல்ல, யோகி பாபுக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. இதனால் கோபத்தை மறந்த மகன் குடும்பத்தை வீட்டுக்கு வரச் சொல்கிறார் இளவரசு. அதன்படி, தனது குடும்பத்துடன் தமிழகத்துக்கு செல்ல யோகி பாபு முடிவு செய்கிறார்.

 

ஜெய் மற்றும் யோகி பாபு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு விமானத்தில் பயணிக்கும் போது இருவரது குழந்தைகளும்  மாறிவிடுகிறது. 


குழந்தைகள் மாறியது தெரியாமல் அவரவர் வீட்டுக்கு செல்பவர்கள் குழந்தைகளை பார்த்து இருவரது தந்தைகளுக்கு பயந்து பதறுகிறார்கள்  . ஜெய் மற்றும் யோகி பாபு குடும்பத்தில் ஆண் வாரிசுக்காகவும், பெண் வாரிசுக்காகவும் காத்திருந்த இருவரது குடும்பத்தில் குடும்ப உறவுகளால்  ஏற்பட்ட குழப்பங்களை  அவர்கள் எப்படி சமாளித்து பிரட்சனைகளை தீர்த்து வைக்கிறார்கள் என்பதை கலகலப்பாக சொல்லும் படம்தான் ‘பேபி & பேபி’.

 

நாயகனாக ஜெய் வழக்கமான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் ..

 

மற்றொரு நாயகனாக யோகி பாபு  ,நாயகிகளாக நடித்திருக்கும் பிரக்யா நாக்ரா மற்றும் சாய் தன்யா , சத்யராஜ் மற்றும் இளவரசு இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்ரி கோஸ், ராமர், தங்கதுரை, சேசு, கல்கி ராஜா, பிரதோஷ் என நட்சத்திர பட்டாளமே  நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக உள்ளனர் .


டி.இமானின் இசையும் ,ஒளிப்பதிவாளர் டி.பி.சாரதியின் ஒளிப்பதிவும்  படத்திற்கு பக்க பலம் .


மாறி போன குழந்தைகளை மையப்படுத்திய கதையுடன்  மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன்  காமெடி கலந்த திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரதாப்


ரேட்டிங் -  2.5 / 5


Comments


©2020 by MediaTalks. 

bottom of page