
ரோகிணியின் மகளான நாயகி லிஜோமோல் ஜோஸ் ரோகிணியிடம் தான் ஒருவரை மனதார காதலிப்பதாக சொல்கிறார்.
ரோகிணி தன் மகளின் காதலுக்கு மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவிப்பதோடு, காதலனை வீட்டுக்கு அழைத்து பேசுவதற்கு லிஜோமோல் ஜோஸ்ஸிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கிறார் .
அம்மாவின் விருப்பப்படி லிஜோமோல் ஜோஸ் தனது காதல் துணையை அழைத்து வருகிறார்.
லிஜோமோல் ஜோஸ் காதலிப்பவரை பார்த்ததும் ரோகிணி அதிர்ச்சியடை கிறார். காரணம், லிஜோமோல் ஜோஸ் காதலிப்பது அவரைப் போன்ற ஒரு தன் பாலின பெண்ணை .
முடிவில் ரோகிணியின் எதிர்ப்பை மீறி லிஜோமோல் ஜோஸ் தன் பாலின காதல் துணையுடன் ஓன்று சேர்ந்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘காதல் என்பது பொதுவுடமை’.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ் தன் பாலின காதல் துணைக்காக பெற்றோர்களிடம் போராடுவதும் , தனது காதல் துணையை அரவணைத்து அன்பு செலுத்துவதும், என கதாபாத்திரத்தை உணர்ந்து கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
தன் மகளின் உணர்வை புரிந்துக் கொள்ள முடியாமல் தடுமாறும் தாயாக நடித்திருக்கும் ரோகிணி , நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் வினித் ,
லிஜோமோல் ஜோஸின் காதல் துணையாக நடித்திருக்கும் அனுஷா,
தீபா சங்கர் , லிஜோமோல் ஜோஸின் நண்பனாக கலேஷ் என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்
கண்ணன் நாராயணின் இசையும் , ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
தான் காதலிக்கும் தன் பாலின காதல் துணையை திருமணம் செய்து கொள்ள பெற்றோர்களிடம் போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து தன் பாலினச் சேர்க்கை மீதான சமூகத்தின் பார்வை, அதற்கான உணர்வுப்பூர்வ விளக்கங்கள் மற்றும் விவாதங்கள் என அனைத்தும் கலந்த திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
ரேட்டிங் - 3 / 5
Comentários