
ஒரத்த நாடு கிராமத்தில் வாழும் வயதில் பெரியவரான அலெக்சிஸ் (பெருசு) என்பவரின் மகன்கள் பஞ்சாயத்து பள்ளி தலைமையாசிரியர் சுனில் மற்றும் பொழுதும் குடிபோதையில் இருக்கும் வைபவ்.
இந்நிலையில் ஒரு நாள் பகல் நேரத்தில் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து டிவி பார்க்கும் நிலையில் அலெக்சிஸ் (பெருசு) திடீரென்று இறந்து விடுகிறார்.
அவர் இறந்தவுடன் உறவுகளான மனைவி தனம் ,சுனில் ,வைபவ் ,சித்தியான தீபா மருமகள்களான சாந்தினி ,நிஹாரிகா என அவரது உடலை பார்க்கும் அனைவருக்கும் இறந்தவரின் அந்தரங்க பகுதி ஆண்மைத்தனத்துடன் வீரியமாக காட்சியளிக்க பார்க்கும் உறவுகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது .
ஒரு கட்டத்தில் சுனில் மற்றும் வைபவ் இந்த பிரச்னையை சரி செய்ய பல வித முயற்சி செய்தும் எதிலும் தீர்வு கிடைக்காமல் போராடுகின்றனர்
ஆனால், இறந்தவர் உடலை மற்றவர்களுக்கு காட்டாமல் இருக்கவும் முடியாது, அதே சமயம் அதில் இருக்கும் சிக்கலை மறைக்கவும் முடியாது .
முடிவில் எந்த பிரச்சனை இல்லாமல் குடும்பத்தினர் இறந்தவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தார்களா ? இல்லையா ? என்பதை விரசம் இல்லாமல் நகைச்சுவையாக சொல்லும்படம்தான் ’பெருசு’.
மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கும் வைபவ், அண்ணன் கதாபாத்திரத்தில் எதார்த்தமாக நடித்திருக்கும் சுனில்,படம் முழுவதும் பிணமாக அப்பாவாக நடிக்கும் அலெக்சிஸ், அம்மாவாக நடிக்கும் தனம் ,தீபா ,சுனிலின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி .வைபவின் மனைவியாக நடித்திருக்கும் நிஹாரிகா, பாலசரவணன், முனீஷ்காந்த் .ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ,கஜராஜ், சுவாமிநாதன், கருணாகரன் என அனைவரும் நடிப்பில் திரைக் கதைக்கு பக்க பலம் .
இசையமைப்பாளர் அருண் ராஜின் இசையும், ஒளிப்பதிவாளர் சத்யா திலகத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
பாலாஜியின் வசனங்கள் கிரேஸி மோகனை நினைவுப்படுத்தினாலும், சில இடங்களில் சிரிப்பே வராத வசனங்களை நகைச்சுவை என்று திணிக்கவும் செய்திருக்கிறது.
அடல்ட் காமெடி கதையாக இருந்தாலும் விரசமில்லாத முழுக்க நகைச் சுவையான வசனங்களுடன் கதையோடு பயணிக்கும் பிரச்சனையை படம் பார்க்கும் ரசிகர்களும் ஏற்று கொள்ளும் விதத்தில் திறமையாக படத்தை இயக்கியுள்ளார் இளங்கோ ராம்
ரேட்டிங்- 3 .5 / 5
Comments