
நாயகன் ரியோ ராஜ் பள்ளி பருவ காலத்தில் அதிக பாசமுள்ள தன் தாய் அடிக்கடி தந்தையிடம் செய்யும் பிரச்சனையான சண்டையினால் திடீரென ஒரு நாள் தன்னையும் தன் அக்காவையும் தவிக்க விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்று விடுகிறாள்.
சிறுவனாக இருக்கும்போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் நாயகன் ரியோ ராஜ்.
இந்நிலையில் ரியோ ராஜின் காதலி கோபிகா ரமேஷ் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.
காதலர்களான இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள்.
சில நாட்களுக்கு பிறகு கோபிகா ரமேஷ் கர்ப்பமடைந்திருப்பதை தெரிந்து கொள்ளும் ரியோ ராஜ், கருவை கலைத்துவிடும்படி சொல்கிறார்.
வயிற்றில் வளரும் கருவை கலைக்க விரும்பாத கோபிகா ரமேஷ் குழந்தை பெற்று கொண்டு ரியோ ராஜுடன் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ விரும்புகிறார் .
தன் விருப்பத்தை கோபிகா ரமேஷ் வெளிக்காட்டாமல், ரியோ ராஜின் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கிறார் .
முடிவில் நாயகன் ரியோ ராஜ் காதலி கோபிகா ரமேஷ் வயிற்றில் வளரும் கருவை கலைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டாரா ?
அல்லது கோபிகா ரமேஷ் தான் விரும்பியபடி குழந்தை பெற்று கொண்டு ரியோ ராஜுடன் திருமண வாழ்வில் சேர்ந்து வாழ்ந்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஸ்வீட் ஹார்ட்’.
நாயகனாக நடிக்கும் ரியோ ராஜ் கதைகேற்றபடி இயல்பான நடிப்பை வெளிபடுத்துகிறார் .
நாயகியாக நடித்திருக்கும் கோபிகா ரமேஷ் உணர்வுப்பூர்வமான நடிப்பில் காதலனின் மனநிலையை புரிந்துகொண்டு சிக்கலான சூழல்களை எதிர்கொள்ளும் பெண்களை பிரதிபலிக்கும் பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்துகிறார்
அருணாச்சலேஸ்வரன், பெளசி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள் .
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் .
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம்
நாயகன், நாயகி இருவரின் காதல் ,.காதலன் - காதலி இடையிலான பிரிவு அதன் பின் கரு கலைப்புக்கு முக்கியத் துவம் தரும் திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகுமார்.
ரேட்டிங் - 3 / 5
Comments