top of page

‘வருணன்’ - விமர்சனம்

mediatalks001

சென்னையில் உள்ள  ராயபுரம் பகுதியில் ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவரும்  தண்ணீர் கேன் விற்பனை செய்கிறார்கள். 


ஒரு புரிதலுடன் இருவருக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு ஏரியா என பிரித்துக்கொண்டு தண்ணிர் கேன் சப்ளை செய்து வருகின்றனர் .


நாயகன்  துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும்  பிரியதர்ஷன்  ராதாரவியிடம் வேலை பார்க்கிறார்கள். 


தொழில் போட்டி காரணமாக சரண்ராஜின் மைத்துனர் வில்லன் சங்கர்நாக் விஜயனுக்கும்  துஷ்யந்த் ஜெயப்பிரகாஷுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. 


சரண்ராஜ் மனைவி மகேஸ்வரி போலீசுக்கு தெரியாமல் சரண்ராஜ் பேச்சை மீறி சட்ட விரோதமாக சுண்ட கஞ்சி வியாபாரம் வருமானத்துக்காக செய்து வருகிறார்.


அந்தப் பகுதி காவல்துறை அதிகாரி ஜீவா ரவி ,,  சரண்ராஜ் மனைவி மகேஸ்வரி சட்ட விரோதமாக நடத்தும் சுண்ட கஞ்சி விற்பனையை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு சீல் வைக்கிறார் .

இந்நேரத்தில்   காவல்துறை அதிகாரி ஜீவா ரவி, ராதாரவியுடன் சேர்ந்து தண்ணீர் கேன்  பிஸினஸ் செய்ய விரும்புகிறார்.


அதற்கு ராதாரவி மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் ஜீவா ரவி எதிர்தரப்பினரான சரண்ராஜூடன் கை கோர்த்து தண்ணீர் கேன் தொழில் செய்ய ஆரம்பிக்கிறார். 

 

போட்டி காரணமாக ஒரு தண்ணிர் கேன் வாங்கினால் இரண்டு தண்ணிர் கேன் இலவசம் என விளம்பரம் செய்து சரண்ராஜ் மனைவி மகேஸ்வரி தண்ணிர் கேன் சப்ளை  செய்கிறார் .

ஒரு கட்டத்தில் குழாய் தண்ணிர் பிடிக்கும் பிரட்சனையில்   சரண்ராஜ் மனைவி மகேஸ்வரிக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷுக்கும் ஏற்படும் தகராறில் மகேஸ்வரிக்கு தலையில் அடிபடுகிறது .


இந்நிலையில் மகேஸ்வரி கொலை செய்யப்படுகிறார்.. மகேஸ்வரி தம்பி வில்லன் சங்கர் நாக் விஜயன்  இந்த கொலைக்கு காரணம் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் என நினைத்து பழி வாங்க நினைக்கிறார்.


முடிவில்  சரண்ராஜ் மனைவி மகேஸ்வரியை கொலை செய்த மர்ம நபர் யார் ?


மகேஸ்வரி கொலையான பிரச்சனையில்   துஷ்யந்த் ஜெயப்பிரகாஷை  சங்கர் நாக் விஜயன் பழி வாங்கினாரா ? என்பதை சொல்லும் படம்தான் ‘வருணன்’ 


ஆண்டவர் கம்பெனி அண்ணாச்சி என்ற கதாபாத்திரத்தில் தண்ணீர் கேன் நிறுவனம் நடத்துபவராக நடித்திருக்கும் ராதாரவி அனுபவ நடிப்பில்  சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .


சரண்ராஜ்  திக்கு வாயினால் திணறுபவராக வேறுபட்ட  நடிப்பின் மூலம்  கவனம் பெறுகிறார்.


நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா, மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் , ஹரிபிரியா மற்றும்  இவர்களுடன் சரண்ராஜ் மனைவி மகேஸ்வரி , ஜீவா ரவி என கதைகேற்றபடி அனைவரும் சிறப்பாக நடிக்கின்றனர் 

வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன்  நடிப்பில் மிரட்டுகிறார் .


இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு  ஏற்றவாறு உள்ளது.


ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு கதைக்கு பக்கபலமாக உள்ளது. 

 

காதல்,ஆக்க்ஷன், பகை என தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரு தரப்புக்கும் இடையே ஏற்படும் மோதலை  மையமாக வைத்து விறுவிறுப்பான ஆக்க்ஷன் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்  ஜெயவேல் முருகன் .


ரேட்டிங் - 3 / 5



Comentarios


©2020 by MediaTalks. 

bottom of page