சென்னையில் உள்ள கே கே நகரில் சலூன் கடை நடத்தி வரும் விஜய் சேதுபதி பள்ளியில் படிக்கும் தனது மகளுடன் சென்னையின் புறநகர் பகுதியான பள்ளிக்கரணையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் P T டீச்சர் மம்தா மோகன்தாஸ் தலைமையில் அவரது மகள் விளையாட்டு முகாமுக்காக வெளியூர் சென்றிருக்கும் போது ,,,தனது வீட்டில் இருக்கும் லக்ஷ்மி யை காணவில்லை என பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள நட்டி நட்ராஜிடம் புகார் அளித்து முகமூடி அணிந்த மூன்று பேர் தன்னை தாக்கிவிட்டு லக்ஷ்மி யை திருடிச் சென்றுவிட்டதாக சொல்கிறார் விஜய் சேதுபதி,.
திருடப்பட்ட லக்ஷ்மி யார்? என்பதை தெரிந்துக் கொண்டு கோபமடையும் நட்டி நட்ராஜ் உட்பட ஒட்டுமொத்த காவல் நிலையமும் விஜய் சேதுபதியை கொல்லாத குறையாக விரட்டியடிக்கிறது.
ஆனாலும், தொடர்ந்து போலீசாரை லக்ஷ்மியை கண்டுபிடித்து கொடுக்குமாறு தொல்லை கொடுக்கும் விஜய் சேதுபதி, தனது லக்ஷ்மி யை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.7 லட்சம் கொடுப்பதாக சொல்கிறார்.
இப்படி ஒரு சாதாரண விசயத்துக்கு இவ்வளவு பணமா..! என்று ஆச்சரியப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டிநட்ராஜ், விஜய் சேதுபதியின் லக்ஷ்மியை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். லக்ஷ்மிக்காக காவல் நிலையத்தை விட்டு நகராத விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த செயல்கள், அவர் லக்ஷ்மிக்காக காவல் நிலையத்திற்கு வரவில்லை, அதை விட மிக பெரிய விஷயம் ஏதோ ஒன்று உள்ளது என போலீசாரே விஜய்சேதுபதியின் மீது சந்தேகப்படுகின்றனர்.
போலீசார் சந்தேகப்படுமளவில் விஜய் சேதுபதிக்கு என்ன நடந்தது ?
விஜய் சேதுபதியின் புகாரின்பேரில் போலீசார் தேடும் லக்ஷ்மி யார்? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லும் படம்தான் ‘'மகாராஜா'’.
கதையின் நாயகனாக மகாராஜா என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தனது உடல் மொழியில் கண்கள் மூலமாக உணர்வுப்பூர்வமான உணர்வுகளை வெளிப்படுத்தி தந்தை மகள் பாசத்தை ஆக்ஷனுடன் கலந்த அமைதியான நடிப்பில் தன் 50வது படத்தில் சிறந்த நடிகராக அனைவரும் பாராட்டும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
குடும்ப பாங்கான வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அனுராக் காஷ்யப் , அவரது மனைவியாக அபிராமி ,போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் , பாரதிராஜா, அருள்தாஸ், முனீஷ்காந்த், மம்தா மோகன்தாஸ், சச்சினா மெமிதாஸ், பாய்ஸ் மணிகண்டன், வினோத் சாகர், தேனப்பன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர் .
காமெடி வேடங்களில் நடித்து கொண்டிருந்த சிங்கம் புலி வழக்கமான கதாபாத்திரத்தில் வருகிறார் என நினைக்கும்போது திடீரென அவர் வில்லத்தனமாக உருமாறும் போது திரையரங்கே அதிர்ச்சியில் உறைவது உண்மை.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவும் ,,இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையும் ,, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலம் .
அழுத்தமான திரைக்கதையுடன் தந்தை - மகள் பாசத்தை மையமாக கொண்ட கதையுடன் யாரும் எதிர்பார்க்காத யூகிக்க முடியாத கிளைமாஸ்க்குடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
ரேட்டிங் - 4 / 5
Comments