MediaTalks Logo
Header Advertisement
cinema news
12 February 2026 at 21:52•4 Views

ஒரு கோடி ரூபாய் காசோலை வழக்கில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் விடுவிப்பு

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
ஒரு கோடி ரூபாய் காசோலை வழக்கில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் விடுவிப்பு

ஒரு கோடி ரூபாய் காசோலை வழக்கில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் விடுவிப்பு*

தயாரிப்பாளர்/நடிகர்/இயக்குனர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் மீது ரூ.1 கோடி மற்றும் அதற்கும் மேலான தொகைக்காக தவறாக காசோலை வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது. ககன் போத்ரா மற்றும் அவரது சகோதரர் சந்தீப் போத்ரா ஆகியோரிடம் ரூ.15 லட்சம் கடன் பெற்றதற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு காசோலையை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, பெற்ற கடன் ரூ.15 லட்சம் கொடுத்தபின்பும் தவறான கோரிக்கை தொடர்பாக அவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், காசோலை வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த XXI கூடுதல் நீதிமன்றம், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் குற்றமற்றவர் எனக் கருதி அவரை விடுவித்தது. மேலும், மேல்முறையீட்டு கால அவகாசம் முடிந்த பின், இருந்தால் பாதுகாப்புத் தொகையை திருப்பி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜே.எஸ்.கே சதீஷ்குமார் சார்பில் வழக்கறிஞர் இன்ஃபன்ட் தினேஷ் ஆஜரானார். ககன் போத்ரா தாமாகவே நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கு தவறானது என்பதை தெளிவாக பிரித்தறிந்து, மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: