MediaTalks Logo
Header Advertisement
cinema news
14 April 2026 at 23:08•6 Views

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்– அதிரடி ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த அதிரடி முன்னோட்டம்!!

தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ பிரபல இயக்குநர் A. R. முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியுள்ள இந்தப் படம், தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதிரடி ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் வலுவான கதாபாத்திரங்களின் பயணம் ஆகியவற்றை இணைத்து, இந்த ட்ரைசர் ஒரு தீவிரமான சினிமா உலகத்தை சிறிய நேரத்தில் மிகச் சக்திவாய்ந்த முறையில் காட்டுகிறது. “ட்ரைலர் + டீசர்” என்ற புதிய வடிவமைப்பில் உருவான இந்த ட்ரைசர், குறுகிய நேரத்தில், நீண்டநாள் நினைவில் நிற்கும் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த ட்ரைசரில் மிக முக்கியமாக திகழ்வது, அதிவேக எடிட்டிங், ஆழமான சவுண்ட் டிசைன் மற்றும் சாம் C. S. இன் அதிரடி பின்னணி இசை. ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தையும் விறுவிறுப்பையும் அதிகரிக்கும் இந்த இசை, படத்தின் முழு அனுபவத்தையும் உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளராகவும் இருக்கும் விஜய் மில்டன் அவர்களின் காட்சிப்பதிவு, “ஆக்ஷன் விருந்து” என்ற அளவுக்கு காட்சிகளை வலுப்படுத்துகிறது.

நடிகர் பரத் வலுவான கதாபாத்திரத்தின் மூலம் திரையில் கவனம் ஈர்க்க, ஆரி அர்ஜுனன் போலீஸ் வேடத்தில் ஸ்டைலான மற்றும் தீவிரமான தோற்றத்துடன் கவர்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் சுனில் ஷெட்டியின் வலுவான நடிப்பு, கதைக்கு மேலும் வலு மற்றும் ஆழத்தைச் சேர்க்கிறது. அதிரடி சஸ்பென்ஸாக 'பால் டப்பா' அவர்களின் தோற்றமும் ட்ரைசருக்கு கூடுதல் கவனத்தை கொடுக்கிறது.

இந்த ட்ரைசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களையும், அதன் கதைத் தன்மையையும் தெளிவாக அறிமுகப்படுத்துகிறது. வேகமான ஆக்ஷன் காட்சிகளும், உணர்ச்சி நிரம்பிய தருணங்களும் இணைந்து, விஜய் மில்டன் அவர்களின் இயல்பான கதை சொல்லும் பாணியை பிரதிபலிக்கின்றன.

தனது தனித்துவமான படைப்பின் மூலம் எளிய மக்களின் வாழ்வைப்பற்றிப்பேசும் விஜய் மில்டன், ஆக்சன் என்பது வெறும் சண்டை காட்சிகளால் நிரம்பியது மட்டுமல்ல, அது உணர்ச்சியும் கதாபாத்திர ஆழமும் கொண்ட ஒரு செயல் என்று மீண்டும் ஒருமுறை இந்த காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Rough Note Production தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம், ஆக்ஷன், செண்டிமெண்ட் மற்றும் சமூக கருத்துக்களை இணைக்கும் ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் ராஜ் தருண், பரத், ஆரி அர்ஜுணன் , சுனில் ஷெட்டி, ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பிரசன்னா பாலசந்திரன், பரத் சீனி, விஜேதா வசிஸ்ட், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆடியோ வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரைசர் மூலம் தொடங்கிய இந்த அதிரடி ஆரம்பம், Gods and Soldiers திரைப்படத்தை ஒரு தீவிரமான மற்றும் முழுமையான சினிமா அனுபவமாக மாற்றும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

[3:25 pm, 14/4/2026] Rekha P R O: X

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: