MediaTalks Logo
Header Advertisement
cinema news
15 May 2026 at 22:18•6 Views

மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!

திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!*

நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் 'ஹபீபி'.

மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து 'யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதிய திறமையாளர்களுடன் நடிகர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்லும் இசையை கொடுத்துள்ளார். குறிப்பாக, 'வல்லோனே...' பாடலுக்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கியிருப்பது கவனம் ஈர்த்தது.

இப்படத்திற்கான நேர்மறையான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: