MediaTalks Logo
Header Advertisement
cinema news
21 May 2026 at 12:54•10 Views

“கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
“கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

“கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்தப் பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்து வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் தேதி அறிவிப்பு “கான் சிட்டி” படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப குழு

எழுத்து, இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங்: அருள் மோசஸ்

இசை: ஷான் ரோல்டன்

கலை இயக்கம்: ராஜ் கமல்

உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: