MediaTalks Logo
Header Advertisement
cinema news
5 September 2026 at 23:25•6 Views

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் L367 படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் இணை தயாரிப்பாளர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பை ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ‘ஆபரேஷன் கங்கா’ என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு மோகன் இயக்கும் மூன்றாவது படம் இது. இவர் இயக்குநராக அறிமுகமான ‘மேப்படியான்’ திரைப்படத்திற்காக தேசிய விருது வென்று கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா – உக்ரைன் போரின் பின்னணியில், உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆபரேஷன் கங்கா’ மீட்புப் பணியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. மோகன்லால் விரைவில் படப்பிடிப்பில் இணைகிறார். மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போலந்து, ஜார்ஜியா, கஜகஸ்தான், டெல்லி, டேராடூன் மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

மோகன்லாலுடன் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். வெளிநாடு மற்றும் பாலிவுட்டை சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக ‘ஆபரேஷன் கங்கா’ உருவாகி வருகிறது.

இப்படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, ‘துரந்தர்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபல இசையமைப்பாளர் ஷாஷ்வத் சச்தேவ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘புஷ்பா 1’, ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மிரோஸ்லாவ் குபா ப்ரோசெக், ‘ஆபரேஷன் கங்கா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘துரந்தர்’, ‘கில்’ உள்ளிட்ட படங்களின் ஆக்ஷன் இயக்குநர் சே யங் ஓ இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.

‘GOAT’, ‘மெய்யழகன்’, ‘அமரன்’, ‘கதனார்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் இப்படத்தின் புரொடக்‌ஷன் டிசைனை கவனிக்கிறார்.

எடிட்டராக ஷமீர் முகமது, ‘துரந்தர்’, ‘யூரி’, ‘3 இடியட்ஸ்’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிஷ்வதீப் சட்டர்ஜி சவுண்ட் டிசைனராகவும் பணியாற்றுகின்றனர்.

‘காந்தாரா’ படத்தின் VFX மேற்பார்வையாளராக பணியாற்றிய கே.வி. சஞ்சித் இப்படத்தின் VFX பணிகளை கவனிக்கிறார். ‘Safed Sagar’, ‘Border 2’, ‘Fighter’ உள்ளிட்ட படங்களில் மிலிட்டரி ஆலோசகராக பணியாற்றிய Squadron Leader Verlin Panwar, இப்படத்திலும் மிலிட்டரி ஆலோசகராக இணைந்துள்ளார்.

‘Lokah’ படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் மெல்வி ஜே, மேக்கப் கலைஞர் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் புரொடக்‌ஷன் கன்ட்ரோலர் ரின்னி திவாகர் ஆகியோரும் இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பில் சுரேஷ் கோபி நடிக்கும் ‘ஒட்டக்கொம்பன்’, ஜெயசூர்யா நடிக்கும் ‘கதனார்’ மற்றும் எஸ்.ஜே. சூர்யா இயக்கும் ‘கில்லர்’ ஆகிய பிரம்மாண்டமான படங்களும் தற்போது தயாரிப்பில் உள்ளன.

‘ஆபரேஷன் கங்கா’ படத்தின் தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு – மிரோஸ்லாவ் குபா ப்ரோசெக்

இசை – ஷாஷ்வத் சச்தேவ்

ஆக்ஷன் இயக்கம் – சே யங் ஓ

புரொடக்‌ஷன் டிசைன் – ராஜீவன்

எடிட்டிங் – ஷமீர் முகமது

சவுண்ட் டிசைன் – பிஷ்வதீப் சட்டர்ஜி

VFX மேற்பார்வை – கே.வி. சஞ்சித்

மிலிட்டரி ஆலோசகர் – Squadron Leader Verlin Panwar

காஸ்ட்யூம் டிசைன் – மெல்வி ஜே

மேக்கப் – ரோனெக்ஸ் சேவியர்

புரொடக்‌ஷன் கன்ட்ரோலர் – ரின்னி திவாகர்

மக்கள் தொடர்பு - சதீஷ் குமார், S2 மீடியா

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: