MediaTalks Logo
Header Advertisement
cinema news
11 September 2026 at 15:11•6 Views

பாடகி தீ (DHEE) - அமெரிக்க பாப் இசை கலைஞர் லாரா ராஜ் ஆஃப் KATSEYE இணைந்து பாடிய ‘வாரி வாரி - VARI VARI’ பாடலின

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
பாடகி தீ (DHEE) - அமெரிக்க பாப் இசை கலைஞர் லாரா ராஜ் ஆஃப் KATSEYE இணைந்து பாடிய ‘வாரி வாரி - VARI VARI’ பாடலின

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தமிழ் பாடகி தீ.. அமெரிக்க பாப் இசை கலைஞரான லாரா ராஜ் ஆஃப் KATSEYE உடன் இணைந்து ‘வாரி வாரி - VARI VARI’ எனும் பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்து, படலாசிரியர் விவேக் வரிகளில், பாடகி தீ குரலில் ஒலித்த ‘வாரி வாரி’ எனும் தமிழ் இண்டி பாடல் அண்மையில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தொடர்ந்து இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த தருணத்தில் அமெரிக்க பாப் இசை பாடகியான லாரா ராஜ் ஆஃப் KATSEYE உடன் இணைந்து ‘வாரி வாரி - VARI VARI’ எனும் பாடலின் ரீமிக்ஸை பாடி வெளியிட்டுள்ளனர். இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், 808 கிருஷ்ணா இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சர்வதேச இசைக் கலைஞர்களான தீ மற்றும் லாரா ராஜ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த ரீமிக்ஸ் பாடல் - கலாச்சார பரிமாற்றத்தின் அடையாளமாக திகழ்ந்து, இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

பாடகி தீ - லாரா ராஜ் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் - தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண் கலைஞர்களின் சர்வதேச இசைக் கூட்டணியில் உருவாகி, உலகளாவிய இசை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடல் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: