MediaTalks Logo
Header Advertisement
cinema news
15 September 2026 at 23:42•8 Views

'மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி - Mookuthi Amman 2: Mahasakthi' படத்தின் டீசர் வெளியீடு

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
'மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி - Mookuthi Amman 2: Mahasakthi' படத்தின் டீசர் வெளியீடு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் - டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி - Mookuthi Amman 2: Mahasakthi' படத்தின் டீசர் வெளியீடு

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் 'ரைஸ் ஆஃப் மகா சக்தி' டீஸர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ் ஆப் மகாசக்தி - Rise of Mahasakthi' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், 'மைனா' நந்தினி, 'கருடா' ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, திரைக்கதை - வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியிருக்கிறார். மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு குஷ்பூ சுந்தர் - குஷ்மிதா கணேஷ்- இஷான் சக்சேனா- விக்னேஷ் சிவன் - ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் 'ரைஸ் ஆஃப் மகா சக்தி- Rise of Mahasakthi' எனும் பெயரில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும்... ரசிகர்களை வியக்க வைத்திருப்பதுடன் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதை உறுதி செய்திருப்பதால்.. இதற்கான வரவேற்பும், டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

🔗https://youtu.be/UUfAemccAJ0

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: