MediaTalks Logo
Header Advertisement
cinema news
19 September 2026 at 23:56•6 Views

தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்ட புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்ட புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’.

இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் நாயகன் தக்க்ஷன் விஜய் அவர்களையும் முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். மேலும், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் அவர்கள், படக்குழுவினரின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு, திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்பிற்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.

மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் லொள்ளு சபா ஜீவா, ஜி. எம். குமார், ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், அப்புக்குட்டி, அமுதவாணன், திவாகர், கஞ்சா கருப்பு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலா மற்றும் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். திரைப்படத்திற்காக வைரமுத்து அவர்கள் அழகான வரிகளுடன் சிறப்பான பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இப்பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். இப்படதை சீயோன் ராஜா இயக்கியுள்ளார்.

‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: