MediaTalks Logo
Header Advertisement
cinema news
26 September 2026 at 16:23•8 Views

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தில் ஆலியா பட்டின் இதுவரை காணாத நியூ ஜெனரேஷன் கேபரேட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படம் குறித்த ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல் போஸ்டர் வெளியானது முதலே இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, படத்தில் ரன்பீர் கபூர் இடம்பெறும் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது, ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான நியூ ஜெனரேஷன் கேபரேட் அவதாரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதல் போஸ்டரில் ஆலியா பட், கண்கவர் ஸ்லிட் ஸ்கர்ட் மற்றும் சிகை அலங்காரத்துடன் நாற்காலியில் அமர்ந்தபடி தோன்றுகிறார். அவரது தோற்றம் படத்தின் கிளாமர் அம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இரண்டாவது போஸ்டரில், ஆலியா பட் முற்றிலும் மாறுபட்ட கேபரேட் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். பின்னணியில் மின்னும் கேபரேட் மேடை இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடை, அலங்காரம் மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படங்களுக்கே உரிய நுணுக்கமான கலை வடிவமைப்பு பிரதிபலிக்கிறது.

ஒரு பன்சாலி திரைப்படத்தின் கதாநாயகி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தனித்துவமான அழகியலை இந்த போஸ்டர்கள் வெளிப்படுத்துகின்றன. ஆலியா பட்டின் கிளாமரஸ் தோற்றம் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதிய பரிமாணத்தை காட்டுவதுடன், அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்த போஸ்டர்கள் மூலம் ஆலியா பட்டை இதுவரை காணாத ஒரு புதிய அவதாரத்தில் சஞ்சய் லீலா பன்சாலி காட்சிப்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தனது தலைமுறையின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ள ஆலியா பட், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக தெரிகிறது. குறிப்பாக, சஞ்சய் லீலா பன்சாலியுடன் அவர் மீண்டும் இணைந்திருப்பது படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது.

‘லவ் & வார்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதலே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோரின் அடுத்தடுத்த தோற்றங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு போஸ்டரும் சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்டமான திரை உலகின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி வருவதால், படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘லவ் & வார்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2027 ஜனவரி 21-ம் தேதி உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: