MediaTalks Logo
Header Advertisement
cinema news
7 October 2026 at 20:20•6 Views

தைவான் சர்வதேச டிசைன் விழாவில் தமிழின் கலைப் பார்வையை உலகுக்கு எடுத்துச் சென்ற கோபி பிரசன்னா

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
தைவான் சர்வதேச டிசைன் விழாவில் தமிழின் கலைப் பார்வையை உலகுக்கு எடுத்துச் சென்ற கோபி பிரசன்னா

தைவானில், 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச டிசைன் ஃபெஸ்டிவல் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக “தாவோயுவான் உலகின் பார்வையில்(Taoyuan POV)” என்ற தலைப்பில் தங்கள் வடிவமைப்பு படைப்புகளைக் காட்சிப்படுத்தவும் விழாவில் பங்கேற்கவும், ஆட்டோமொபைல் டிசைனர், கிராபிக் டிசைனர் , ப்ராடக்ட் டிசைனர் போன்ற உலகின் பல்வேறு துறை சார்ந்த, சிறந்த 20 வடிவமைப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்தியாவின் சார்பில் அழைக்கப்பட்டிருந்த நால்வரில், தமிழகத்திலிருந்து தமிழ்த் திரைப்படத் துறையில் 'ஆரண்ய காண்டம்', 'கத்தி', 'விக்ரம் வேதா', 'சூப்பர் டீலக்ஸ்', 'பொன்னியின் செல்வன்', 'ராக்கா' உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களுக்கு போஸ்டர் டிசைனராக சிறப்பாகப் பணியாற்றி வரும் திரு. கோபி பிரசன்னா அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார் .

மேலும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அவரது வடிவமைப்பு, விழா ஏற்பாட்டாளர்கள், அருங்காட்சியாளர்கள் மற்றும் சக பங்கேற்பாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கோபி பிரசன்னா தமிழர்களின் அருங்கலையான தெருக்கூத்துக் கலைஞனாகத் தன்னை உருவகப்படுத்தி, தன் பார்வையில் தாவோயுவானின் கலாசாரத்தைக் கூர்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் தனது படைப்பைச் சிறப்பாக வடிவமைத்திருந்தார். மந்தர் சசிகாந்த் ரானே, இஷான் கோஸ்லா மற்றும் பிரியங்கா கான்யேகர் ஆகியோரது படைப்புகளும் இந்தியாவின் சார்பில் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

தாவோயுவான் நகரில் நடைபெற்ற 'மிரர் ஆப் தி சிட்டி' எனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட திரு. கோபி பிரசன்னா அவர்கள், அங்கு நவீன ஒலி ஒளி அமைப்புகளுடன் வெளியிடப்பட்ட 'லைட் அண்ட் ஷேடோ ஆர்ட்' விழாவை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: