MediaTalks Logo
Header Advertisement
cinema news
11 September 2025 at 19:02•2 Views

’காயல்’ - விமர்சனம்

Janagiraman
Janagiraman
செய்தி ஆசிரியர்
’காயல்’ - விமர்சனம்

போலீஸ் மேலதிகாரியாக பாண்டிச்சேரியில் பணிபுரியும் ஐசக் வர்கீஸ். இவரது மனைவி அனுமோல் இவர்களது மகளான காயத்ரி சங்கர் கணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்நிலையில் மகளின் தற்கொலையால் அதிர்ச்சியாகும் ஐசக் வர்கீஸ் மற்றும் அனுமோல் கதறியபடி தனது மகளின் உடலை பார்க்கச் செல்கின்றனர். மகளின் உடலை பார்த்ததும் இருவருமே உடைந்து போகிறார்கள்.

ஒரு கட்டத்தில் காயத்ரி – லிங்கேஷ் இரண்டுவருடங்களுக்கு முன்புஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.

காயத்ரியின் தந்தை ஐசக் வர்கீஸ் மகளின் காதலுக்கு உடனே பச்சைக் கொடி காட்டுகிறார்.

ஆனால், அம்மாவான அனுமோல் வேறு சாதியைச் சேர்ந்த லிங்கேஷ் தனக்குமருமகனாக வர கூடாது என்கிற முடிவில்தனது அண்ணன் மகனுக்கு தனது மகள் காயத்ரியை மணமுடித்து கொடுத்து விடுகிறார்

இந்நேரத்தில் தனது மகளின் மரணத்தினால் தன் மனைவியான அனுமோலை வெறுக்கிறார் ஐசக் வர்கீஸ் .

முடிவில் காயத்ரி உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா ? அவரது மரணத்துக்கு என்ன காரணம்?

இறுதியில் அனுமோலை வெறுத்த ஐசக் வர்கீஸ் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’காயல்’

கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐசக் வர்கீஸ் அனுமோல் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் .இருவரும் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் லிங்கேஷ் காதலனாகவும் ,நாயகியாக வரும் காயத்ரியும் இயல்பான நடிப்பில் நடித்துள்ளனர்..

மற்றோரு நாயகியாக வரும் ஸ்வாகதா காதல் மற்றும் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.

நண்பராக வரும் ரமேஷ் திலக் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பக்க பலமாக உள்ளது. ஒளிப்பதிவாளர்கார்த்திக் ஒளிப்பதிவில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஆரம்பம் முதல் இறுதிவரை விறுப்பான திரைக்கதை அமைப்பில் காதல், பாசம், சாதி பிரிவினை ஆகியவற்றை மைய கருவாக வைத்து ஒரு அழகான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தமயந்தி

ரேட்டிங் : 3 / 5 - 5

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்: