top of page
mediatalks001

'ஆர் யூ ஓகே பேபி ? ' - விமர்சனம் !பாசத்தில் பரிதவிக்கும் வாழ்வியலின் அற்புதம் !!


குடிகார காதலன் அசோக்கை திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்தல் முறையில் கருவுற்று அந்த கருவை கலைக்க முடியாமல் பிறக்க இருக்கும் குழந்தையை நினைத்து கலங்கும் முல்லையரசி ,,, நர்ஸ் வினோதினியிடம் தன் நிலைமையை சொல்கிறார் .


முல்லையரசிக்கு ஆறுதல் சொல்லும் வினோதினி குழந்தை பிறந்ததும் குழந்தை இல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தையை கொடுத்து விடலாம் அதற்கு என்ன பணம் வேண்டுமோ அதை நான் வாங்கி தருகிறேன் உனக்கு இருக்கும் பிரச்சனையில் உன்னால் குழந்தையை வளர்க்க முடியாது என யோசனை சொல்ல வினோதினியின் வார்த்தைக்கு சம்மதிக்கும் முல்லையரசிக்கு சில மாதங்களுக்கு பின் அழகான பெண் குழந்தை பிறக்கிறது .

இந்நேரத்தில் பிறந்த தன் குழந்தையை முல்லையரசியை பார்க்க விடாமல் திருமணமாகி குழந்தையில்லாமல் அவதிப்படும் சமுத்திரக்கனி -அபிராமி தம்பதிகளுக்கு பணத்தை வாங்கி கொண்டு சுவீகார அடிப்படையில் அந்த பெண் குழந்தையை அவர்களிடம் கொடுத்து விடுகிறார் நர்ஸ் வினோதினி.


சில நாட்களுக்கு பின் குழந்தையை நினைத்து ஏக்கத்தில் தவிக்கும் முல்லையரசி தன் தவறை உணர்ந்து தன் பிரச்சனையை குழந்தைகள் நல வாரியத்தில் புகார் தெரிவிக்க ,,,நல வாரியம் காவல் துறையிடம் விசாரணையை மேற்கொள்ள ஆணையிடுகிறது .


இந்நிலையில் இத் தகவலை அறிந்த ஒரு டிவி சானல் 'சொல்லாததும் உண்மை' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் முல்லையரசியின் பிரச்சனையை ஷோவாக நடத்த அவரிடம் பொறுப்பை ஒப்படைகிறது .

நேரடி ஒளிபரப்பில் விசாணையை நடத்தும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முறையில்லாத முல்லையரசியின் வாழ்க்கை நிலை அறிந்து தொடர்ந்து அந்த நிகழ்வை முடித்து கொள்கிறார் .



இந்நிலையில் முறைப்படி கோர்ட் உத்தரவின் மூலம் சுவிகார முறையில் சமுத்திரக்கனி -அபிராமி தம்பதிகள் குழந்தையை வாங்க தவறியதால் சமுத்திரக்கனி -அபிராமியிடமிருக்கும் குழந்தையை காவல் துறை குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைக்கிறது .


இவர்களது பிரச்சனை நீதி மன்றத்துக்கு செல்ல முடிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குழந்தையை அழைத்து செல்வது முல்லையரசியா? அல்லது சமுத்திரக்கனி -அபிராமி தம்பதிகளா? என்பதை உணர்வுபூர்வமான கதையமைப்பின் மூலம் இயல்பாக சொல்லும் படம்தான் 'ஆர் யூ ஓகே பேபி ? '


திருமணமாகி குழந்தையில்லாமல் தவிக்கும் தம்பதிகளாக சமுத்திரக்கனி -அபிராமி இருவரும் கதாபாத்திரங்களாக வாழ்கின்றனர் . இருவரது அனுபவ நடிப்பு கதைக்கு பக்க பலமாய் அமைகிறது .

பெற்ற குழந்தையின் பாசத்திற்கு ஏங்கும் தாயாக முக்கிய கதாபாத்திரமாக முல்லையரசி இயல்பான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

'சொல்லாததும் உண்மை' நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் , மிஷ்கின் , ஆடுகளம் நரேன் , வினோதினி , அசோக் , ரோபோ ஷங்கர் , அனுபமா குமார் ,பாவல் நவநீதன் என நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .


இசை ஞானி இளையராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க துணை .


தரமான ஒளிப்பதிவில் கிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவு !



திருமணமாகி குழந்தையில்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையாக

உணர்ச்சிமயமான திரைக்கதை அமைப்புடன் முடிவில் சமுத்திரக்கனி -அபிராமி தம்பதியிடம் குழந்தை செல்லாதா என படம் பார்க்கும் ரசிகர்களே ஏங்குமளவில் இயல்பான காட்சிகள் அமைத்து அனைவரும் ரசிக்கும் குடும்ப படமாக படத்தை இயக்கியுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.


ரேட்டிங் ; 3.5 / 5


'ஆர் யூ ஓகே பேபி ? ' பாசத்தில் பரிதவிக்கும் வாழ்வியலின் அற்புதம் !!


Comments


bottom of page