நேர்மையான துணிச்சல் மிக்க பத்திரிகை நிருபரான திரிஷா ,,,, தனியார் சானலில் செய்தி பிரிவில் வேலை செய்கிறார் . இவரது தைரியமான நடவடிக்கைகளால் அண்ணனும் அண்ணியும் இடைவெளிவிட்டே திரிஷாவிடம் பழகுகின்றனர் .
இந்நிலையில் திரிஷாவின் அண்ணன் மகளான அனஸ்வராவுவின் பேஸ் புக் கணக்கில் ஆபாசமான வீடியோ ஒன்று பதிவாக,,,, மகளின் ஆபாசமான வீடியோவை பார்த்து அலறும் அண்ணனை தைரியப்படுத்தும் திரிஷா அனஸ்வராவுவின் பேஸ் புக் கணக்கை விசாரிக்க ஆரம்பிக்க பல திருப்பங்கள் ஏற்படுகின்றன.
அனஸ்வராவு உடன் படிக்கும் பள்ளி தோழியே அழகாய் இருக்கும் அனஸ்வராவுவின் போட்டோவுடன் அவளது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கை உபயோகித்து ஆண்களுடன் பேசி வரும் நிலையில் ஒருவனது வேண்டுகோளுக்கு இணங்க முகம் தெரியாமல் உடலழகை மட்டும் நிர்வாணமாக வீடியோ எடுத்து அந்த பெண் அவனுக்கு அனுப்புகிறாள் .
இதனை கண்டுபிடிக்கும் திரிஷா அந்த கணக்கில் உள்ள அனைவரிடமும் பேசத் தொடங்க,,,ஒரு கட்டத்தில் அனைவரையும் அழைத்து எச்சரிக்கையுடன் விரட்ட ,,,, பிரச்சினை முடியும் நேரத்தில் ,,,,, பேஸ் புக் கணக்கில் உள்ள தீவிரவாத போராளியிடம் தொடர்ந்து திரிஷா அனஸ்வராவை போல பேச,,,, உள்ளூர் பிரச்சினை தீர்ந்து உலக அளவிலான தீவிரவாத பிரச்சனையில் மாட்டி கொள்கிறார் ..
பிரச்சினையில் மாட்டி கொண்ட திரிஷா அதிலிருந்து மீண்டு வந்தாரா !! பேஸ் புக் கணக்கில் திரிஷாவிடம் தொடர்பு கொண்ட அந்த தீவிரவாதி யார்? என்பதை சொல்லும் படம்தான் 'ராங்கி'
தையல் நாயகியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் 'ராங்கி' த்தனம் கொண்ட உடல்மொழியில் பத்திரிகை நிருபராக நடித்துள்ள திரிஷா ஆக்க்ஷன் காட்சிகளில் அதிரடி நாயகியாக கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
சுஷ்மிதாஎன்ற பள்ளி மாணவி வேடத்தில் நடித்துள்ள அனஸ்வராவு அமைதியான நடிப்பில் இயல்பு !
கதைக்கு முக்கியத்துவமான ஆலிம் என்ற கதாபாத்திரத்தில் போராளியாக நடித்திருக்கும் உஸ்பெகிஸ்தான் நடிகர் தொடக்கத்தில் இருந்து முடிவில் தன் காதலியான சுஷ்மிதாவை பார்க்கும் காட்சிகளில் உணர்ச்சிமயமான நடிப்பில் ரசிக்க வைக்கிறார் .
காவல் துறையில் உள்ள சிலரை போல எதார்த்தமான நடிப்பில் இன்ஸ்பெக்டராக வரும் இயக்குநர் ஜான் மகேந்திரன் .
படத்திற்கு பக்க பலமாக சி. சத்யாவின் இசையும் ,,,, ஒளிப்பதிவாளர் சக்திவேலின் ஒளிப்பதிவும் !!!
படத்தின் முடிவில் மிரட்டலான ஆக்க்ஷன் காட்சிகளை பாராட்டும்படி அமைத்த ராஜசேகர் மாஸ்டர் !!
சமூகத்தில் நடக்கும் அநியாய அக்கிரமங்களை கண்டு நேர்மையான செய்தி நிருபராக இருக்கும் பெண்ணின் ஆதங்கம் ,,அரசியலில் மத்திய அமைச்சர் தீவிரவாத தொடர்புடன் நடத்தும் வியாபாரம் ,,, இணையதள வளர்ச்சியில் இளைய தலைமுறையினரின் நடத்தை நாசமாகும் அபாயம்,,,என ஏ ஆர் முருகதாஸ் எழுதிய கதைக்களத்தில் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுடன் உலக தீவிரவாத போராளிகள் பிரச்சனையை கதையுடன் பயணித்து ,,,, துப்பாக்கியேந்தும் போராளியின் மென்மையான காதலின் அழகோடு,,,, முடிவில் காதலன் ஆலிம் பேசும் வசனமாக “எங்கள் நாட்டில் வளம் இல்லாமல் இருந்திருந்தால், நானும் என் நாட்டு தலைவரும் கொல்லப்பட்டிருக்க மாட்டோம், உங்கள் நாட்டிலும் வளம் இருக்கிறது எச்சரிக்கையாக இரு சுஷ்மிதா ” என உண்மையான போராளிகளின் மன இறுக்கங்களை சொல்லும் இயல்பான வசனங்களுடன் ரசிகர்கள் ரசிக்கும்விதமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எம்.சரவணன் .
ரேட்டிங் : 4. / 5
ความคิดเห็น