top of page
mediatalks001

’ டிரைவர் ஜமுனா ’ - விமர்சனம் !திட்டம் போட்டு பாய்ந்த பெண் புலி !!

Updated: Jan 1, 2023


கவுன்சிலராக போட்டியிடும் கால் டாக்ஸி ஓட்டும் டிரைவரான,,,, ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா 'ராஜா ராணி' பாண்டியனை அரசியல் பகையால்

தேர்தலுக்கு முன் வீட்டில் புகுந்து கூலி படை கும்பல் அவரை வெட்டி கொலை செய்கிறது .


தந்தைக்கு பிறகு உடல் நிலை சரியில்லாத அம்மா ஸ்ரீரஞ்சனியுடன் ஆண்கள் செய்யும் வேலையான பயணிகளை காரில் ஏற்றி செல்லும் கால் டாக்ஸி ஓட்டும் டிரைவர் வேலை செய்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் .


இந்நேரத்தில் எக்ஸ் எம் எல் ஏ வான ஆடுகளம் நரேனையும் , அவரது மகனையும் கொலை செய்ய அவரது வீட்டிற்கு கூலி படை கும்பல் காரில் செல்கிறது , போகும் வழியில் அவர்களது கார் சிறு விபத்துக்குள்ளாக ,,,கொலையாளிகளில் ஒருவன் கால் டாக்ஸியை புக் செய்ய டிரைவர் ஐஸ்வர்யா ராஜேஷிடம் அவர்களின் இணைப்பு கிடைக்கிறது .


ஐஸ்வர்யா ராஜேஷின் காரில்,, அவர்கள் செல்லும் இடத்திற்கு கொலைகார கும்பல் ஏறிக்கொள்கின்றனர் .


இதற்கிடையில் தன்னை கொலை செய்ய வீட்டிற்கு ஒரு கும்பல் வருவதை தெரிந்து கொண்டஆடுகளம் நரேன் ,,,தன் அடியாட்கள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த ,,,தகவலறிந்த போலீஸும் ஐஸ்வர்யா ராஜேஷின் காரில் அந்த கும்பல் செல்வதை மோப்பம் பிடித்து ,, காரை ஓட்டும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் போனின் தொடர்பில் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை பிடிக்க உதவுமாறு கேட்க ,,,போலீஸ் பின்தொடர்வதை தெரிந்து கொண்ட கொலையாளிகளில் ஒருவன்,,,,,

போலீசிடம் இருந்து தப்பி ஆடுகளம் நரேனையும் , அவரது மகனையும் வெட்டி சாய்க்க தங்கள் சொல்படி காரை ஓட்ட ஐஸ்வர்யா ராஜேஷை துப்பாக்கி முனையில் மிரட்டுகிறான்.


முடிவில் துப்பாக்கி முனையில் மிரட்டும் கொலைகார கும்பலிடமிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா ?

பலத்த பாதுகாப்பில் இருந்த ஆடுகளம் நரேனும் அவரது மகனும் தங்களை கொல்ல வரும் கூலி படை கும்பலிடமிருந்து தப்பித்தார்களா ?


இறுதியில் ஆடுகளம் நரேனை கொலை செய்ய ஆட்களை ஏவிய அந்த மர்ம நபர் யார் ? என்பதை அதிரடியான திருப்புமுனையுடன் ரசிக்கும்படியான கதையுடன் சொல்லும் படம்தான் ’டிரைவர் ஜமுனா’



ஐஸ்வர்யா ராஜேஷ்,,, 'டிரைவர் ஜமுனா' வாக,,,கதையின் நாயகியாக ,,,, கால் டாக்ஸி ஓட்டும் கார் டிரைவராக இயல்பான நடிப்புடன் ,,,, கூலிப்படை கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் போது பயம் கலந்த நடிப்பில் தப்பிக்க போராடும் காட்சிகளிலும் ,,,,படத்தின் முடிவில் எதிர்பாராத திருப்புமுனையான காட்சிகளில் மன தைரியம் கொண்ட பெண்ணாக உணர்ச்சிமயமான ,, அமைதியான நடிப்பில் கதாபாத்திரத்துடன் இணைந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.



எக்ஸ் எம் எல் ஏ வாக வரும் ஆடுகளம் நரேன் ,,,ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவாக ராஜா ராணி பாண்டியன் ,அம்மாவாக ஸ்ரீரஞ்சனி , தம்பியாக அபிஷேக், ஆடுகளம் நரேனின் மகனாக மணிகண்டன், காரில் பயணிக்கும் கூலிப்படை கும்பலை சேர்ந்த நடிகர்கள் என அனைவருமே தங்கள் பங்களிப்பில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .


ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !


கதையின் வேகத்திற்கு இணையான ஜிப்ரானின் பின்னணி இசை !


தெளிவான நேர்த்தியான படத்தொகுப்பாளர் ராமரின் பட தொகுப்பு !


சஸ்பென்ஸ் கலந்த விறு விறுப்பான காரில் பயணிக்கும் கதை களத்துடன் ,,,,யாரும் யூகிக்க முடியாத படத்தின் இறுதியில் ராக்கெட் வேகத்தில் பறக்கும் திரைக்கதையில் திருப்புமுனையான எதிர்பாராத கிளைமாஸ்க் காட்சிகளுடன்,,,, படம் பார்க்கும் ரசிகர்கள் பாராட்டும் தரமான படமாக இப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கின்ஸ்லின்.



ரேட்டிங் : 3.5 / 5










Comments


bottom of page