ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு ,கீழத்தெருவைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில் மேலத் தெருவை சேர்ந்த சாந்தனுவும், கீழத்தெருவை சேர்ந்த சஞ்சய் சரவணனும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர் .
ஒற்றுமையாக இருக்கும் இரு சமூக கிராம மக்களை பிரிக்க .அரசியல் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகள் சதி செய்கின்றனர் !.
சாந்தனுவை சென்னையில் இருந்து வரும் ஆனந்தி காதலிக்கிறார்.
இவர்களின் காதலை தெரியாத சஞ்சய் சரவணன் ஆனந்தியை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இச் சூழலில் சாந்தனு, ஆனந்தி காதல் சஞ்சய் சரவணனுக்கு தெரியவர நட்புக்காக உயிரையும் கொடுக்கும் நண்பர்களான இருவரும் ஒருவருக்கொருவர் பகைவர்களாக மாற. அவர்களது நட்புக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.
அரசியல்வாதிகளின் சதி ,நண்பர்களது பகைமை என ஒட்டு மொத்த கிராமமே அலற வைக்கும் கலவரமாக மாற ,
முடிவில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் பிரிந்த சாந்தனுவும், சஞ்சய் சரவணனும் மனம் மாறி ஓன்று சேர்ந்தார்களா ?
இரு கிராம சமூகத்தினரிடையே ஒற்றுமையை கெடுத்து கலவரத்தை உண்டாக்கிய அரசியல்வாதிகளின் சதி திட்டம் வெற்றியடைந்ததா ?
இறுதியில் சாந்தனு ஆனந்தி காதலர்களான இருவரது காதலின் நிலை என்ன ? என்பதை சொல்லும் படம் தான் ‘இராவண கோட்டம்’.
கதையின் நாயகனாக சாந்தனு காதல் , நட்பு , பாசம் , ஆக்க்ஷன் என பல பரிணாமங்களில்,,,,, ஆக்ரோஷம் கலந்த அதிரடி நாயகனாக சிறப்பான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகியாக வரும் ஆனந்தி காதல் காட்சிகளில் துறுதுறு பெண்ணாக எதார்த்தமான நடிப்பில் கதையுடன் இணைந்து பயணிக்கிறார்.
மேலத்தெரு மக்களின் தலைவராக பிரபுவும் கீழத்தெரு மக்களின் தலைவராக இளவரசும் ஊர்த் தலைவர்களாக அனுபவ நடிப்பினால் ரசிகர்களின் மனதில் வாழ்கிறார்கள் . புதுமுகமான சஞ்சய் சரவணன் ,தேனப்பன், அருள்தாஸ், தீபா , ஒத்த கையுடன் வரும் முருகன், சத்யா என நடித்த நடிகர்கள் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருந்தாலும் பின்னணி இசையில் அசத்துகிறார்
கதைக்கேற்றபடி ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரனின் திறமையான ஒளிப்பதிவு !
காலம் காலமாக குடிநீருக்கு அவதிப்படும் இராமநாதபுர மாவட்ட மக்களின் துயரமான சீமைக் கருவேல மர பிரச்சினை, அரசியல் சூழ்ச்சி, கார்ப்பரேட் மாஃபியா வியாபாரம்,என கதை களம் அமைத்து இயக்கியுள்ளார் விக்ரம் சுகுமாரன்
ஜாதி, இனம் பார்த்து பழகாத,,,, மக்களிடையே ஜாதி வெறியை தூண்டும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர். மற்றபடி சீமைக்கருவேல மரங்களின் பின்னணியில் கார்ப்பரேட் வியாபார அரசியல் இருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் வசனங்களினால் காட்சிப்படுத்திய வகையில் மட்டும்தான் இயக்குனர் யார் என ரசிகர்களுக்கு கேட்க தோன்றுகிறது ,
நடித்த நடிகர்கள் அனைவருமே கதாபாத்திரங்களுடன் இணைந்து நடிப்பில் பயணித்தாலும், திரைக்கதையில் கவனம் வைத்து இயக்குனர் இயக்கியிருந்தால் இராமநாதபுர மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த படங்களில் ஒன்றாக ‘இராவண கோட்டம்’ இயக்குனருக்கு அமைந்திருக்கும் .
ரேட்டிங் ; 2.5 / 5 - விமர்சனம் !
Comentarios